சிறிய மார்பகம் என்ற கவலையா? மருத்துவரை அணுகும் முன் இதை படியுங்கள்

Report Print Abisha in பெண்கள்
3183Shares

பெண்களின் அழகில் மார்பகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

சில பெண்களுக்கு இயற்கையாகவே மார்பகம் சரியான அளவில் இருக்கும். அவ்வாறு சரியான அளவு இல்லாத பெண்கள், நிச்சயம் அதை குறிப்பிட்ட உணவு எடுத்துக் கொள்வதன் மூலம் சரி செய்யலாம்.

அவ்வாறு பெரிதும் பரிந்துரைக்கப்படும் உணவு பட்டியலில், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

ஒருவேளை உங்களுக்கு, தானாக வளரும் உடல் பாகம் எவ்வாறு இந்த உணவு மூலம் அளவில் மாற்றம் ஏற்படும் என்று சந்தேகம் ஏழலாம். அதற்கான, விடை இந்த கட்டுரையை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மார்பக அளவை அதிகரிக்க உதவும் ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்

மார்பக வளர்ச்சி என்பது பெண்களில், குழந்தை பருவத்தில் இருந்தே பார்க்க முடியும். ஆனால், பெண்கள் பருவமடைந்த பின் இந்த மார்பக வளர்ச்சி முக்கிய நிலையை எட்டுகிறது. ஈஸ்ரோஜன்கள் தான் பெண்களின் மார்க வளர்ச்சிக்கான முக்கிய அங்கமாகும். இது கருப்பையில் இருந்து வெளிப்பட்டு மார்பக வளர்ச்சியை தூண்டிவிடுகிறது.

ஆனால், இதற்கு மருத்துவர்கள் பெரும்பாலும் கருத்தரிப்பு தடை மாத்திரிரைகளை பெண்களுக்கு பரிந்துரைக்கின்றன. அந்த மாத்திரைகள் தேவையற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தி நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்திவிடும். இயற்கையாக இதை சரி செய்ய சிறந்த வழி ஈஸ்ரோஜன் நிறைந்த உணவுகளை உண்பது தான்.

மார்பகத்தை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

விலை உயர்ந்த மருந்துகள் மூலம் உங்கள் மார்பக அளவை பெரிதுபடுத்த முயற்சிக்கும் முன் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

சோயா பால்

சோயா புரோட்டின் அளவை அதிகப்படுத்தி, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த சோய பால் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதால், பொதுமக்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது குறித்த ஆய்வில் கூட சோயாவால் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகமாக இருப்பதால் ஈஸ்ரோஜன்களை அதிகப்படுத்தும் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சோயா மிதமான அளவில் எடுத்துக்கொள்வது மார்பகத்தை பெரிதாக்க உதவும்.

உலர்ந்த பழங்கள் மற்றும் பருப்பு வகைகள்

நட்ஸ் எனப்படும் பருப்பு வகைகளும், உலர்ந்தபழங்களும் சிறந்த தின்பண்டமாக மட்டுமல்லாமல், மார்பக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வால்நட்ஸ், பிஸ்தா, வேர்கடலை ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஐசோஃப்ளேவோன்களை அதிகரிக்க செய்கிறது. பேரிச்சை பழம், கொடிமுந்திரி, உலர்ந்த பாதாம் ஈஸ்ட்ரோஜன்களை அதிகப்படுத்துவதுடன், வைட்டமின்கள், தாதுகள் ஆகியவையும் உடலில் அதிகப்படுத்துகின்றன.

பால்

பால் வகையை சேர்ந்த உணவுகள், மார்பக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. அது தவிர எலும்புகள் வலுபெறவும் இது முக்கிய அம்சமாக உள்ளது. பசும் பால், பெண்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டதாகும். இது ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களை தூண்டிவிட்டு மார்பகத்தை வளர செய்யும். மேலும், பசும் பாலில் அதிக கொழுப்பு சத்தும் உள்ளது. எனவே பால் தவறாமல் உட்கொண்டு வந்தால், மார்பகத்தின் கொழுப்பு படிவத்தை அதிகப்படுத்த பெரிதும் உதவும்.

பப்பாளி பழம்

இது கடினமானது என்று தோன்றினாலும், பப்பாளி மார்பக வளர்ச்சிக்கு முக்கி பங்கு வகிக்கிறது. பழுத்த பப்பாளியைவிட பழுக்காத அல்லது லேசாக பழுத்தப் பப்பாளியில், ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ளது. பப்பாளி மற்றும் பால் சேர்த்த மில்க் ஷேக் குடித்து பலருக்கு மார்பகம் வளர்ச்சியடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், பப்பாளியில் அதிகம் பாப்பையின் உள்ளது. இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் எனவே இதை சாப்பிட துவங்குவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

கடல் உணவுகள்

கடல் உணவுகளில், மாங்கனீஷியம் அதிகம் உள்ளது. எனவே இது உடலில் ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்க செய்யும். இறால், சிப்பி, மற்றும் இறால் வகை மற்ற மீன்களும் மார்பக வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. இது பாலியல் உணர்வையும் தூண்டிவிடும் தன்மை கொண்டது.

வெந்தையம்

வெந்தையத்தில் மார்பக வளர்ச்சியை அதிகரிக்க கூடிய பைட்ஸ்ட்ரோஜன் அதிக அளவில் உள்ளது. இது மார்பக வளர்ச்சியை தூண்டும் இரண்டு முக்கிய ஹார்மோன்களான எஸ்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரோன் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. முளைத்த வெந்தையத்தில், டையோஸ்ஜெனின் செறிவூட்டபட்ட அளவு அதிக அளவில் உள்ளது. இது இயற்கையான ஈஸ்ட்ரோஜனாக செயல்படும்.

ஆளி விதை

இது சிறய வகை விதை, ஆனால் இதில் ஊட்டச்சத்து மிகுதியாக உள்ளது. உடலுக்கு பல நன்மைகளை செய்யும் இந்த விதை மார்பக வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது. ஆளிவிதையில், லிக்னான்ஸ் அதிகம் உள்ளது. எனவே பைட்ஸ்ட்ரோஜன் போல செயல்படுகிறது. இது மற்ற விதைகளை விட 800 மடங்கு அதிக லிக்னான்ஸ் இருப்பதால் இயற்கையாகவே மார்பகத்தை நன்கு வளர செய்யும் தன்மை கொண்டுள்ளது.

பழங்கள்

பெரி வகை பழங்களான ஸ்ரோபெரி, பிளாக்பெரி ஆகியவை மார்பகத்தை பெரிதாக்க உதவுகிறது. மேலும் ஆப்பிள், பிளம்ஸ் பழங்களிலும் ஈஸ்ரோஜனை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது எனவே இவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும் மார்பக வளர்ச்சியையும் தூண்டிவிடும்.

காட்டு கருணை கிழங்கு

காட்டு கருணை கிழங்கில், புரோட்டின், ஈஸ்ட்ரோஜன் அதிகம் காணப்படுகிறது. இது பொதுவாக வெந்தயம் போல் செயல்படுகிறது. எனவே மார்பக வளர்ச்சியை தூண்டும். ஆனால், ஆய்வுகளில் காட்டு கருணை கிழங்கு மார்பக வளர்ச்சியுடன் உடல் எடையையும் அதிகரிக்கும் தன்மை உடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்து முன் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது.

எள் விதை

எள் விதை சாலட்கள், ரொட்டி போன்வற்றில் சுவைக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது தனித்துவமான அதிக நன்மைகளை கொண்டுள்ளது. அதிக அளவில், பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளதால் பெண்களுக்கு இது அதிக நன்மை பயன்கின்றது. ஆய்வுகள் படி இந்த விதைகள், பெண்களின் மார்பகத்தை பெரிதுபடுத்த மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுள்ளது. இதில்,பிளாவனய்டுகள் மற்றும் அமினோ அமிலம் அதிக அளவில் உள்ளது.

மர்பகம் அளவை கூட்டும் மூலிகைகள்

நீங்கள் விருப்பப்பட்டால், இந்த மூலிகைகளை மார்பக வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்.

பூரேரியா மிரிஃபிகா:

இது ஒரு வகை தாவரம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும். பெண்களின் இளமையை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கும் மருந்தாக இது உள்ளது. இது உடலில், பைட்டோ ஈஸ்ட்ரோஜனை அதிகப்படுத்த உதவுகிறது. மார்பக திசுவை அதிகரிக்க முக்கிய பங்குவகிக்கிறது. பூரேரியா பவுடர் வடிவிலும், மாத்திரை வடிவிலும் ஆன்லைனில் விற்கப்படுகிறது.

டாங் குய் வேர்

டாங் குய் சீனாவில் பரவலாக பயன்படுத்தும் தாவரமாகும். இது மாதவிடாய் கோளாறுக்கும் முக்கிய மருந்தாக விளங்குகிறது. பல சோதனைகள் மூலம், டாங் குய் மார்பகத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இப்பினும் மற்றொரு ஆய்வில் இந்த வேரை அதிகம் எடுத்துக்கொண்ட நபருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது. எனவே மருத்துவரை ஆலோசிக்காமல் இதை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்.

மொத்ததில், மார்பக வளர்ச்சிக்கு முக்கியமானது ஈஸ்ட்ரோஜன். எனவே ஈஸ்ட்ரோஜன் அதிகம் உள்ள உணவுகள் எடுத்து கொண்டால் நிச்சயம் மாற்றத்தை காணலாம். பெண்கள், மார்பகம் சிறிதாக உள்ளது என்று பேட்டுகள் வைத்த உள்ளாடைகளை வாங்கி அணிவதை விட தரமான நல்ல உணவுகள் உட்கொண்டு பெரிதுபடுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்