புளிச்ச கீரை தண்டில் சானிட்டரி நாப்கின்! தமிழ் பெண்களின் அசத்தல் முயற்சி

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களில் 80% பிளாஸ்டிக் இருக்கும். இது மட்க, 700 - 900 ஆண்டுகள் ஆகிறது என கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி பிளாஸ்டிக்கும் ரசாயனங்களும் கலந்து உருவான நாப்கின்கள் புற்றுநோய் முதல் பல தொற்று நோய்கள் ஏற்பட மூலக்காரணமாக அமைகின்றது.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த ஃபேஷன் டெக்னாலஜி படித்த மாணவர்கள் இருவர் புளிச்சகீரை தண்டுகளை பயன்படுத்தி பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.

உடலுக்கும் இயற்கைக்கும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் நாப்கின்களுக்கு மாற்றாக, புளிச்ச கீரை தண்டில் நாப்கின்கள் தயாரித்து அசத்தியிருக்கின்றனர் கோயம்புத்தூரைச் சேர்ந்த நிவேதா மற்றும் கௌதம்.

கல்லூரி படிப்பில் புராஜெக்டுக்காக சானிடரி நாப்கின்கள் தயாரித்து அதனை குடும்பத்தில் இருந்தவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் பயன்படுத்தக் கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படிப்பு முடித்த கையோடு ஸ்டார்ட் அப் தொழிலாக இந்த நாப்கின் தயாரிப்பை இருவரும் கையில் எடுத்து தற்போது இந்தியா மட்டுமல்லாது வெளிநாட்டிலும் இவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

இதுகுறித்து நிவேதா “சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த நாப்கின்கள், உடலுக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது” என கூறியுள்ளார்.

மேலும் இந்த நாப்கின் கண்டுபிடிப்புகளுக்காக மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நிவேதா, கெளதம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...