பெண்களே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் சகல பாதிப்புகளும் குணமாக வேண்டுமா? இதே ஆயுர்வேத மருந்து

Report Print Kavitha in பெண்கள்

ஒரு பெண்ணின் வாழ்வில் கடைசியாக ஏற்படும் மாதவிடாயைக் ‘மெனோபாஸ்’ என்றழைக்கப்படுகின்றது.>

இதனை பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணும் 50 வயதை அடைந்த பின் சந்தித்தே ஆக வேண்டும்.

ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் மனத் தடுமாற்றம், குழப்பங்கள், கோபம், தூக்கமின்மை, எரிச்சல் என பல வகை பாதிப்புகள் ஏற்படும்.

சீரற்ற மாதவிடாய், அதிகப்படியான உதிரப்போக்கு அல்லது குறைவான உதிரப்போக்கு, 15 நாள்களுக்குள் மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டமின்மை, எரிச்சல், கோபம், சரும வறட்சி, அதிகப்படியாக வியர்த்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பன இவை யாவும் இதன் அறிகுறிகள்.

அந்தவகையில் அந்த சமயத்த்தில் தக்க முன்னெச்செரிக்கையாக செயல்பட்டால் ஆயுர்வேதத்தில் குறிப்பிட்டபட்டுள்ள சில முறைகளை பின்பற்றினாலே போதும். தற்போது அவற்றை பார்ப்போம்.

  • தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.
  • சுத்தமான ஆடதொடா இலைகள் பத்து எடுத்து அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும். பிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட்டு வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுத்து அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும். மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.
  • அஸ்வகந்தாரிஷ்டம் என்ற மருந்தை உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.
  • நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்சி பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.
  • தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேளாவேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்