ஆப்கானிஸ்தானில் இரு வீர பெண்மணிகள்! என்ன தொழில் செய்கிறார்கள்?

Report Print Abisha in பெண்கள்

ஆப்கானிஸ்தானில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் இரு பெண்கள் ஈடுபடும் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகள் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது, அங்காங்கே புதைக்கப்பட்டிருக்கும் வெடிகுண்டுகளில் சிக்கி குழந்தைகள் பெண்கள் என்று பலரும் உயிரிழந்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.

அப்படி பாமியன் மாகாணத்தில் சோவியத் -ஆப்கான் போரின்போது தலிபான் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இரு பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பெயர் ஃபாத்திமா அமிரி மற்றும் ஃபிசா.

இதுகுறித்து ஃபாத்திமா பேசுகையில், மலைப் பகுதியில் சென்ற இளைஞர் ஒருவர் வீடுதிரும்பவில்லை. அவர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்ததாக நம்பபடுகின்றது. அவரை இழந்து அந்த குடும்பம் மிகவும் துயரத்தில் அழ்ந்தது. இந்நிகழ்வுதான் நான் இந்த பணியில் இணைய காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஃபிசா தெரிவிக்கையில், எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தொழிலுக்கு என் தாயரும், மாமியாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சவாலான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பணியில் இணைந்தேன். ஆனாலும், குடும்பத்தினருடன் நேரம் செலவிட தவறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த இரு பெண்களும் பாமியன் மாகாணத்தில் தினமும் இரண்டு மணிநேரத்தை கண்ணிவெடிகளை அகற்றுவதில் செலவிடுகின்றனர். பாமியன் மாகாணத்தை கண்ணி வெடிகளற்ற பகுதியாக மாற்றுவதே தங்களின் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்