பெண்கள் மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக நம்மில் பல பெண்கள் முக்கியமான விஷேசங்கள், பக்கத்து வீட்டு சுப நிகழ்ச்சிகள், சுற்றுலா செல்லுதல் போன்ற காரணங்களுக்காக மாதவிடாயை தள்ளிப்போட நினைப்பதுண்டு.

இதற்காக இதனால் தான் மாதவிடாயை சிறிது காலம் தடுத்து வைத்திருக்க மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

அதிலும் சிலர் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்தின் பெயரை சொல்லி தாமே கடைகளில் மாத்திரைகளில் வாங்கி கொள்கின்றனர்.

இருப்பினும் இவ்வாறு வாங்குவது மிகவும் தவறு ஆகும். இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது.

அந்தவகையில் மாதவிடாய் தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என பார்ப்போம்.

மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தலாமா?

மாதவிலக்கை தடுக்கும் மாத்திரைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது. சிலருக்கு அது ஒவ்வாமையை உண்டாக்கும்.

ஏனெனில் கர்ப்பபையின் நிலைகளை பொருத்து மாத்திரைகள் மாறுபடும். எனவே மருத்துவரிடன் சென்று கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து உங்களது கர்பப்பையின் நிலைக்கேற்ற மாத்திரைகளை சாப்பிடுவதே நல்லது.

ஆரோக்கிய பின்னணி தெரியாமல் மாத்திரைகளை சாப்பிடுவது முற்றிலும் தவறு. அவ்வாறு சாப்பிட்டால், உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு 'மைக்ரேன்' எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இயற்கையாக உண்டாகும் மாதவிடாயை மருந்துகளை உபயோகித்து தள்ளிப்போடுவதால், பின்னாளில் மிக அதிக அளவு உதிரப்போக்கும், முன்பு எப்போது இல்லாத அளவுக்கு உடல் வலியும் உண்டாகும் எனப்படுகின்றது.

தீர்வு

மாதவிலக்கு ஏற்படுவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பாக உணர செய்யக்கூடிய நாப்கின்கள் அதிகம் கிடைக்கின்றன.

மாதவிலக்கை தடுத்து வைப்பதற்கு பதிலாக அது போன்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...