மாதவிடாயின் போது முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்... ஏன் தெரியுமா? தெரிஞ்சுகோங்க

Report Print Santhan in பெண்கள்

மாதவிடாய் என்பது மாதம் மாதம் பெண்களுக்கு ஏற்படும் ஒரு சுழற்சியாகும். இதனால் ஒவ்வொரு மாதத்தின் போதும் பெண்கள் அதனைப் புதிதாக அனுபவிப்பது போலவே உணர்கிறார்கள்.

மாதவிடாயின் போது பெண்களுக்கு வயிற்று வலி, உடல் வலி, எரிச்சல் மற்றும் மனசோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களினால் பெண்களின் சருமம் வறண்டு மற்றும் கடினமான ஒன்றாக மாறிவிடும் என்பதால், மாதவிடாயின் போது உங்கள் சருமத்தினை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்குக் கண்டிப்பாக அவர்களின் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன்களின் மாற்றத்தினால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தினமும் உங்கள் முகத்தினை இரண்டு முறை சோப்பு பயன்படுத்தாமல் நல்ல பேஷ் வாஷ் பயன்படுத்திக் கழுவுங்கள்.

சோப்பில் ஒலீயிக் அமிலம் உள்ளது. எனவே பேஷ் வாஷ் பயன்படுத்துவதே சிறந்தது. இதனை நீங்கள் உங்களின் மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து செய்யத் தொடங்குங்கள்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம் கொண்டவர்கள் அல்லது முகப்பரு உள்ளவர்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் இயற்கையாக ஆன்டிசெப்டிக் இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கவும் பளபளக்கச் செய்யவும் உதவுகிறது.

மேலும் நீங்கள் வீட்டிலேயே வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை பயன்படுத்தி முகத்தில் மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். இவை உங்கள் முகத்தினை ஈரப்பதத்துடன் வைக்கும். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

மசாஜ்

மாதவிடாயின் போது உடலுக்கு மசாஜ் செய்வதினால் உடல் வலி மற்றும் சோர்வுகளிலிருந்து விடுதலை பெறலாம். மசாஜ் செய்யும் போது நரம்புகள் மற்றும் தசைகள் மென்மையாக்கப்பட்டு இரத்த ஓட்டத்தைச் சீராக வைக்கின்றன.

தூக்கம்

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மாதவிடாயின் போது கண்டிப்பாக நீங்கள் 8 மணி நேரம் தூக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடல் மற்றும் மனதளவில் சில மாற்றங்கள் நிகழும் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்த கண்டிப்பாகத் தூக்கம் அவசியம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...