பெண்களுக்கு ஏன் கருவுறாமை ஏற்படுகின்றது தெரியுமா?

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும்.

இதனால் பல பெண்கள் பல நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது பொதுவாக 35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும்.

பெண்களுக்குக் கருவுறாமை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அவற்றை நாமும் தெரிந்து கொண்டால் அதிலிருந்து எளிதில் விடுபட முடியும். தற்போது அந்த காரணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகின்றது?

  • மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணமாகும்.
  • மாதவிடாய் சமயங்களில் இடுப்பு பகுதியில் வலி அளவுக்கு அதிகமாக இருப்பதும் கருவுறாமைப் பிரச்னையின் அறிகுறியே.
  • அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. ஏனெனில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.
  • ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்னை ஏற்படுகின்றது.
  • பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.
  • கருவுறுதல் நிகழ சுரப்பிகளின் பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்