விமானநிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... மோடியின் மனைவிக்கு வித்தியாசமான பரிசு கொடுத்த பெண் பிரபலம்

Report Print Santhan in பெண்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மனைவிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமானநிலையத்தில் சந்தித்து அவருக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்கினார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜியும் பிரதமர் நரேந்திரமோடியும் அரசியல் அரங்கில் பரம எதிரிகளாக காணப்படுகின்றனர்.

மேற்கு வங்க லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டில் மம்தா பானர்ஜி போல் எந்த ஒரு முதல்வரும் மோடியை இப்படி விமர்சித்தது கிடையாது.

அதே போன்று பிரதமர் மோடியும் எல்லா மாநிலங்களையும் விட மேற்கு வங்கத்தில் கட்சியை வளர்க்க பல அதிரடியான வியூகங்களை வகுத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென் கடந்த திங்கட் கிழமை கொல்கத்தா வந்தார். அங்கிருந்து ஜர்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள அசன்சாலில் உள்ள கல்யானேஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

அதன் பின், மீண்டும் கொல்கத்தா விமான நிலையம் வந்தார். இதற்கிடையே முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடிய சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று சென்றார்.

இதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜி செல்லும் வழியில் மோடியின் மனைவியை யசோதா பென்னை சந்தித்தார்.

அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசி நலம் விசாரித்து கொண்டனர். திடீரென்று, மம்தா பானர்ஜி மோடியின் மனைவிக்கும் புடவை ஒன்றை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

அதை பெற்றுக் கொண்ட யசோதாபென் சிறிது நேரம் பேசினார். அதன்பிறகு அவரவர் விமானத்தில் ஏறி இருவரும் புறப்பட்டு சென்றனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்