பிச்சையெடுத்த பெண்ணுக்கு அடித்த அதிர்ஷடம்... வசதியான வீட்டில் பிறந்தும் இது தான் நடந்தது என வேதனை

Report Print Santhan in பெண்கள்

இந்தியாவில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், இப்போது பாலிவுட்டில் கலக்கி வரும் நிலையில், அவர் நான் வசதியான வீட்டில் தான் பிறந்தேன் என்பதை வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்தியாவின் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ரனகத் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ரனு மண்டல் என்ற பெண், பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஸ்கரின் பாடல் ஒன்றைப் சமீபத்தில் பாடினார்.

அவரின் பாடலைக் கேட்டதும் மெய் சிலிர்த்துப்போன ஒருவர், அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ, தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ரனு மண்டலுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பொன்றை வழங்கியது.

அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்த இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

ரனு மண்டலுக்கு 55 இலட்சம் இந்திய ரூபா மதிப்பிலான வீடு ஒன்றை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பரிசாக அளித்துள்ளதாகவும், மேலும் அவர் அடுத்ததாக நடித்துவரும் தபங் 3 படத்தில் ரனு மண்டலுக்கு பாட வாய்ப்பளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின.

இந்நிலை ரனுமண்டல் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் தான் சாலையோரத்தில் எல்லாம் பிறக்கவில்லை என்றும், நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்தான் என்றும் கூறியுள்ளார்.

தன் விதி காரணமாக 6 மாத குழந்தையாக இருக்கும்போதே குடும்பத்தை விட்டு பிரிய நேர்ந்ததாகக் கூறிய ரணு தனக்கு திருமணமான பிறகு மேற்குவங்கத்தில் இருந்து மும்பைக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும் தனது கணவர் நடிகர் பெரோஸ் கான் வீட்டில் சமையல்காரராகப் பணியாற்றி வந்தார். அவரது மகன் பர்தீன் கல்லூரி பயின்ற காலத்தில், தங்களையும் ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சொந்த வீடு இருந்ததாகவும், ஆனால் தனிமையில் தன்னால் அங்கு இருக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்புக்காக பாடவில்லை என்றும், தனக்கு பாடுவது பிடிக்கும் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பாடி வந்தேன், தனக்கு தற்போது பாடக் கிடைத்துள்ள வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் 5 முதல் 6 பாடல்கள் வரை தான் பாடியிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்