பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்பட என்ன காரணம்? அதற்கு அற்புதமான வைத்தியம் இதோ

Report Print Santhan in பெண்கள்
276Shares

தற்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக வலியுடன் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் அவதிப்படுகின்றனர்.

மாதவிடாய் நாட்களில் வலி ஏற்பட காரணம்

அதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது.

ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.

தவிர்க்க கூடாதவை

காலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம். ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் வலி வராமல் இருக்க கடுக்காய் மருந்து

கடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும்,

இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும்.

கொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.

அதன் பின் சிறிது லவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் வராது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்