யார் இந்த சுஷ்மா சுவராஜ்? மோடி கண்கலங்கியதற்கு என்ன காரணம்? இவரைப் பற்றிய ஒரு முழுத் தொகுப்பு

Report Print Santhan in பெண்கள்

இந்தியாவில் ஒரு இரும்பு பெண்மணியை இழந்துவிட்டோம் என்று அரசியல் தலைவர்கள் பலரும் சுஷ்மா சுவராஜை புகழ்ந்து வரும் நிலையில், அவர் யார்? அவரை இப்படி அரசியல் தலைவர்கள் புகழ்வதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர், சுஷ்மா ஸ்வராஜ். டெல்லி சட்டக் கல்லூரியில் படித்தபோது அவரின் சக மாணவர் ஸ்வராஜ் கௌஷல்(ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இருந்தார் ) என்பவரை காதலித்து கடந்த 1975-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின் வழக்கறிஞராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். வட கிழக்கு மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகளை முழுவதுமாக அறிந்த நபராக ஸ்வராஜ் கௌஷல் இருந்ததால், இவர், 1990 முதல் 1993 வரை மிசோரம் மாநில ஆளுநராக இருந்துள்ளார்.

ஹரியானா விகாஸ் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (1998-2004) இவர் இருந்தார். அப்போது, சுஷ்மா மக்களவை உறுப்பினராக (1998-99) இருந்தார். 2000-2004 காலகட்டத்தில் இவர்கள் இருவருமே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள்.

அதன் பின் 2014-ஆம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபோது, வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே டெல்லியின் முதல் பெண் முதல்வரும் ஆவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா ஸ்வராஜ் ஆவார். 2006-ஆம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

இளம் வயதிலே அமைச்சரான பெருமை அவருக்கு உண்டு. பா.ஜ.கவின் ஹரியானா மாநிலத்தலைவராக இருந்தார். அதுமட்டுமின்றி வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது வெளிநாட்டில் இருந்த இந்தியர்கள் பலருக்கும் பாஸ்போர்ட் கிடைக்க, அவர்கள் இந்தியா வருவதற்கும் உதவியுள்ளார்.

இப்படி மக்கள் மத்தியில் நல்ல பெயர் கொண்ட ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், யாருக்கு தான் அழுகை வராது, அதுவே மோடியின் கண்களில் தெரிந்தது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்