சீனாவில் ஆண்களை விட பெண்கள் ஆயுள்நீட்சி : ஆய்வில் வெளிவந்த தகவல்

Report Print Kavitha in பெண்கள்

சீனாவில் ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் வாழ்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

அதில் சீனாவில் வாழும் மக்களின் ஆயுள் காலம் இதர மேற்கத்திய நாடுகளில் வாழ்பவர்களின் ஆயுள் காலத்தைவிட சற்று அதிகமாக இருந்து வருகிறது எனவும் ஆண்களை விட பெண்களே அதிக ஆண்டுகள் வாழ்வதாக முன்னர் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் வாழ்ந்த பெண்களின் அதிகபட்ச ஆயுள் காலத்தைவிட தற்போது 12.37 ஆண்டுகள் அளவுக்கு பெண்கள் ஆயுள்நீட்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டில் 82.15 வயதாக இருந்த பெண்களின் அதிகபட்ச ஆயுள் எதிர்பார்ப்பு 2018-ம் ஆண்டு நிலவரப்படி 84.63 ஆக அதிகரித்துள்ளது என குறித்த ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக இதற்கு காரணமாக அரசு காப்பீடு திட்டத்தின்கீழ் தாராளமான மருத்துவ வசதி மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களினால் அங்கு பெண்களின் ஆயுள் அதிகரித்து வருவதாக குறித்த ஆய்வறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

இதேபோல், கடந்த 1979-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மகப்பேறின்போது பெண்கள் உயிரிழப்பது 68 சதவீதம் குறைந்துள்ளதாகவும், குழந்தைகள் இறந்தே பிறப்பது 88 சதவீதம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனை சீனாவின் தலைநகரான பீஜிங் நகர மாநகராட்சியின் சுகாதாரக்குழு வெளியிட்ட புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்