வங்கி வேலையை விட்டு சுயதொழில் செய்து சாதித்த இலங்கை பெண்ணின் வெற்றிக் கதை!

Report Print Abisha in பெண்கள்

இலங்கை வட மாகணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உள்நாட்டு போரில் இருந்து மீண்டு சுயதொழில் செய்து சாதித்துள்ளார்.

இலங்கை வட மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்ராலினி. இவரது குடும்பம் முன்னதாக இலங்கை உள்நாட்டு போரில் சிக்கி தப்பி பிழைத்துள்ளது. ஸ்ராலினி வியாபார முகாமைத்துவம் படித்துள்ளார். இவருக்கு வங்கிகளிலும், படிப்பு சார்ந்த பல வேலைகளும் கிடைத்துள்ளது. ஆனால் அதை தவிர்த்து தான் சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று தன் நிலைபாட்டில் சரியாக இருந்துள்ளார்.

அவரின் பெற்றோர் முதலில் மறுப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் ஆதரவு வழங்கி உள்ளனர். இலங்கையில் பெரும்பாலனோர் கோழி ஆடு, மாடு போன்றவை வளர்க்கும் சூழலில், இவர் வாத்து வளர்க்க வேண்டும் என்று தன் நிலையை முன்னெடுத்துள்ளார்.

தனினொரு பெண்ணாக வாத்து வளர்க்கும் ஸ்ராலினி இயற்கை விவசாயமும் செய்கிறார். இது குறித்து பேசிய ஸ்ராலின் ”வடமாகணத்தில் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படித்தவர்களும் பலர் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் அனைவரும் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று வாத்து பண்ணை அமைத்து பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் ஸ்ராலினி

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்