மாதவிடாயின் போது உறிபஞ்சுகளை பயன்படுத்தலாமா?

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக மாதவிடாய் காலங்களில் அதிக பெண்கள் சானிட்டரி நேப்கினே பாவிப்பதுண்டு.

ஆனால் சில பிளாஸ்டிக்கை கொண்டு உருவாக்கப்படும் சானிட்டரி நேப்கின்களாக தான் உள்ளது.

இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக தற்போது (Tampon) உறிபஞ்சுகள் வந்துள்ளன.

இதனை பாவிப்பதற்கு மிகவும் எளிதகாவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என சில பெண்கள் கூறுகின்றார்கள்.

செல்லுலோஸ் அல்லது பருத்தியை கொண்டோ அல்லது இரண்டையுமே சேர்த்தோ தயாரிக்கப்படும் இந்த மாதவிடாய் உறிபஞ்சுகள் ஒருவரது இரத்தம் வெளியேறும் அளவை பொறுத்து பல வகைகளில் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன.

அந்தவகையில் இந்த உறிபஞ்சு (Tampon) எப்படி பயன்படுத்துவது என்று இங்கு பார்க்கலாம்.

  • முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் உறிபஞ்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • அதன்பின்னர் டாய்லெட்டுக்கு சென்று ஒரு காலை மடக்கி மற்றொரு கால்ளை விரித்து Tampon உறிபஞ்சை உங்களது வெர்ஜின் பகுதியில் உள்ளேசெலுத்த வேண்டும்.

  • இந்த உறிபஞ்சுகளை உபயோக படுத்திய பின்பு பாதுகாப்பாக அதனை அப்புறப்படுத்த வேண்டும். டாய்லெட்டில் ஃப்ளஷ் பண்ணக்கூடாது.

  • Tampon உறிபஞ்சை உட்செலுத்திய பின்னர் நீங்கள் அசவுகரியமாக உணர்ந்தால், அதை உடனே அகற்றிவிட்டு புதிய உறிபஞ்சை எடுத்து சரியாக உள்ளே செலுத்த வேண்டும். இதை சரியாக செலுத்திய பின்னர் எந்தவித உறுத்தலும் அசௌகரியமும ஏற்படாது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்