மார்பகப் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்

Report Print Abisha in பெண்கள்

பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பதும் மார்பகப் புற்றுநோய்தான். பெரும்பலும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் ஒருவித மார்பக வலி கூட சில நேரங்களில் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். அப்படி தோன்றுபவை தற்காலிகமானது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் எந்த எந்த மாற்றங்கள் மார்பக புற்றுநோயாக இருக்க கூடும் என்பதை பார்க்கலாம்

  • மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் வீக்கம்
  • மார்பக அமைப்பில் மாற்றம்
  • மார்பகக் காம்பில் திரவம் கசிதல்
  • மார்புக் காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளல்
  • மார்பகத் தோலில் சுருக்கம் அல்லது புள்ளிகள் தோன்றுவது
  • மார்பகம் சிவத்தல், வீங்குதல், கதகதப்படைதல்.

இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். மேலும், மார்பக புற்றுநோய் உயிரை கொல்லும் அளவில் கொடிய நோய் கிடையாது. ஆரம்ப நிலையில் முழுவதும் குணப்படுத்தகூடியதே.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்