அன்று அழகி...... இன்று இராணுவ அதிகாரி: 10 நிமிட உற்சாக கதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்

நாம் காணும் கனவில் நம்பிக்கையோடு இருந்தால் அதனை நிச்சயம் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்பவர் இராணுவ அதிகாரி கரிமா யாதவ்.

இவரது வாழ்க்கை பயணம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு நிச்சயம் முன்னுதாரணமாக இருக்கும்.

டெல்லியில் உள்ள Stephen கல்லூரியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த கரிமாவுக்கு, தான் ஒரு இராணுவ அதிகாரி ஆக வேண்டும் என்பதே கனவு.

ஆரம்பத்தில் ஐஏஎஸ் தேர்வு எழுதிய இவருக்கு அது வெற்றியை கொடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக, சி.டி.எஸ் ( CDS - ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள்) பரீட்சையில் வெற்றி பெற்றபோதும், சென்னையில் உள்ள OTA (இராணுவ பயிற்சி அகாடமி) பயிற்சி வகுப்பு கிடைத்தது.

இதற்கிடையில் 2017 ஆம் ஆண்டு India's Miss Charming Face' போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். இதில், வெற்றி பெற்றதையடுத்து இத்தாலியில் உள்ள அழகி போட்டியில் கலந்துகொள்வதற்கு அழைப்பு வந்துள்ளது.

ஆனால், தனது கனவான இராணுவ அதிகாரி பயிற்சியை முடிக்க வேண்டும் என்பதற்காக அழகி போட்டி வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

இராணுவ அதிகாரி பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இவர் தற்போது தனது கனவை நனவாக்கியுள்ளார்.

இராணுவ அதிகாரி பயிற்சியில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. ஆரம்பத்தில் கடுமையான பயிற்சிகள் இருந்த காரணத்தால் கடினமாக உணர்ந்தேன். மேலும் போதிய உடல்நலமும் எனக்கு இல்லை.

ஆனால் கடுமையாக முயற்சி செய்து முன்னேறினேன். நல்ல முறையில் என்னை நிர்வகித்துக்கொண்டேன். அனைத்து பாடத்திட்டங்களிலும் தீவிரமாக பங்குபெற்றேன்.

நீங்கள் அனைத்து விளையாட்டுக்களிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சி பெறுவதற்கு உடல் ரீதியாக வலுவாக இருக்க வேண்டும் என்று தவறான கருத்தை மக்கள் கொண்டுள்ளனர்.
அது உண்மை இல்லை. நீங்கள் உங்கள் பலவீனங்களை முதலில் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். அந்த பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு பணியாற்றவும் தயாராக இருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு நாளும் சிறந்த ஒன்றை நமது வாழ்வில் பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என கூறுகிறார் கரிமா.

தனது கனவில் உறுதியாக இருந்து வெற்றி பெற்ற கரிமாவின் வாழ்க்கை நிச்சயம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு முன்னுதாரணம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்