இந்த 6 ராசி பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்: எச்சரிக்கையுடன் இருங்கள்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

என்னதான் பெண்களை பூக்களுடன் ஒப்பிட்டாலும் அவர்களுக்குள்ளும் சில தீய குணங்கள் இருக்கத்தான் செய்யும்.

அந்த வகையில் கீழே கூறப்பட்டுள்ள 6 ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் பிடிவாதம் மற்றும் பிறரை கட்டுப்படுத்தும் குணம் உடையவராய் இருப்பார்கள், ஆனால் இது அவர்களின் நட்பை எந்த விதத்திலும் பாதிக்காது.

நீங்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டியதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு ஓருபோதும் துரோகம் செய்யக்கூடாது. ஒருவரின் முகத்தை பார்த்து அவர்களை நம்புவது இவர்களின் வழக்கமல்ல.

கடகம்

இந்த ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் மர்மமானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் தீயகுணத்தை சரிசெய்யும் பொருட்டு அவர்களுக்கு பிடித்தாவர்களுக்கு மிகவும் நேர்மையானவராக இருப்பார்கள். இவர்கள் பழிவாங்க போடும் சதிதிட்டங்களில் எந்த நியாயமோ, இரக்கமோ இருக்காது, இவர்களின் ஒரே குறிக்கோள் எதிராளியை காயப்படுத்துவதுதான்.

சிம்மம்

இவர்கள் ஒருபோதும் சதித்திட்டம் தீட்டியோ அல்லது மறைமுகவோ எதிரிகளை வீழ்த்த முயற்சிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யவும் தயங்கமாட்டார்கள்.

இவர்களின் இந்த குணம் இவர்களை எப்பொழுதும் ஈகோ அதிகம் உள்ளவர்களாக காட்டும், ஆனால் அதுவும் ஒருவகையில் உண்மைதான். தாங்கள் நினைப்பதுதான் சரி என்னும் மனோபாவம் இவர்களிடம் ஏராளமாக இருக்கும். இவர்களின் விருப்பங்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே இவர்களுக்கு எதிரிதான்.

சிம்ம ராசி பெண்களை ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.

கன்னி

மிகவும் கூச்ச சுபாவம் உடைய கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இரக்க குணம் கொண்டவர்கள் ஆனால் அந்த முகமூடி உடையும் அவர்கள் மொத்த தீயசெயல்களின் உருவமாக மாறிவிடுவார்கள்.

அவர்களின் செயல்கள் விமர்சிக்கப்படும் போது அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகம் வெளிப்படும். இவர்கள் இரக்கமின்றி செய்யும் சதிச்செயல்களால் ஏற்படும் விளைவுகள் உங்களை யாரையும் குறைவாக மதிப்பிடவோ, விமர்சனம் செய்யவோ கூடாது என்று பாடத்தை கற்றுத்தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் மிகச்சிறந்த ஆளுமையும், இனிமையான குணமும் கொண்டவர்கள் ஆனால் இதெல்லாம் நீங்கள் அவர்களின் நண்பராக இருக்கும் வரைதான். ஏனெனில் ஒருமுறை அவர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் அவர்களை போல மோசமான, கொடூரமான எதிரிகள் இருக்கவே வாய்ப்பில்லை.

இவர்கள் மற்றவர்களை வார்த்தைகளால் காயப்படுத்துவதில் வல்லவர்கள், எனவே அவர்கள் உங்களுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள்.

மீனம்

இந்த ராசி பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில் இவர்கள் போல உங்கள் தோல்வியில் பங்கெடுத்து கொள்ளும், எந்த சூழ்நிலையிலும் உங்களுக்கு ஆதரவாய் இருக்கும் தோழியும் இல்லை, அதேசமயம் உங்களை அவமானப்படுத்தி, வாழ்வதே வீண் என்று நினைக்கவைக்கும் மோசமான எதிரியும் இல்லை.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்