இருட்டில் ஆண்களால் தொலையும் பெண்கள் .. நரக வாழ்க்கை: விலையில்லா விலைமாதுக்களின் உண்மை நிலை

Report Print Deepthi Deepthi in பெண்கள்

விலைமாதுக்கள் என்றாலே உடல் முழுவதும் அலங்காரம் செய்துகொண்டு, பணம் குவிக்கிறார்கள் என்றுதான் கேள்விபட்டிருப்போம், ஆனால் அவையெல்லாம் சினிமாவில் மட்டும் தான் அப்படி காட்டப்படுகிறது, நிஜத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

அவர்களுக்கு ஒழுங்கான விலையும் இல்லை, நிலையான வாழ்க்கையும் இல்லை.

புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பகுதியில் தெரிந்துகொண்டவற்றை கூறியுள்ளார்.

அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதியில், மொழிவாரியாக பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில் அவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரேஅறையில் பல பெண்கள் வசிக்கிறார்கள். தடுப்புச் சுவர் என்ற பெயரில் சாயம்போன புடவைகள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.

வாரத்திற்கு ஒருமுறை விலைமாது களுக்கு விடுமுறையும், சம்பளமும் வழங்கப்படுகிறது. குழுவாக வாழும் அவர்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள். சுத்தமான குடிநீர் அவர்களுக்கு கிடைப்பதில்லை. வெளிஉலகத் தொடர்பும் இல்லை. போதுமான பணமும் கிடையாது.

மாதமொரு முறை இலவச மருத்துவ பரிசோதனைக்கும் அவர்களை அனுமதிக்கிறார்கள்.

அவர்கள் அனுமதியின்றி வெளியே செல்ல முடியாதநிலை உள்ளது. அவர்களுடைய தொலைபேசி முதற்கொண்டு அனைத்து அசைவு களையும் கண்காணிக்க ஒரு மேற்பார்வையாளர் உள்ளார்.

அவர்களது செயல்பாட்டில் ஏதாவது சந்தேகம் வந்துவிட்டால் அவ்வளவுதான் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். பெண்களை பல நாட்கள் இருட்டறையில் அடைத்துவைத்து பட்டினிபோடுகிறார்கள். சூடு வைக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கென்றே இயங்கும் தனி மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்துக் கொள்ளவேண்டும். அதையும் மீறி உடல்பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணை அடித்துதுரத்திவிடுவார்கள்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers