திருமணத்திற்கு முன் கர்ப்பம்: என்னவென்றே தெரியாமல் கட்டாயத்திற்கு ஆளான பின் வாழ்க்கையில் குழப்பம்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

திருமணத்திற்கு முன் கர்ப்பம் என்பதை சமூக சீர்கேடாகவும், அவமானத்திற்குரியதாகவும்தான் கருதுகிறோம்.

இது பற்றி பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இ்ல்லை. நகரத்து பெண்களைவிட கிராமத்து பெண்களே, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

இது தொடர்பான ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அஜ்மீர் பகுதியில் 4500 இளம் பெண்களிடம் ஆய்வு நடத்தியுள்ளார்கள். 8 கிராமங்களிலும், 8 நகரங்களிலும் ஆய்வு நடந்துள்ளது.

ஆய்வு முடிவில், ‘படிக்கச் செல்லும் பெண்களைவிட வீட்டில் இருக்கும் பெண்கள்தான் அதிகமாக, திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைகிறார்கள்.

முறையற்ற கர்ப்பத்திற்கு பின்னால் எடுக்கப்படும் சில பிரச்சினைக்குரிய நடவடிக்கைகளால் அவர்கள் பலியாகவும் செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் கிராமப் பெண்கள் 60 சதவீதம் பேர் திருமணத்திற்கு முன் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நகரத்து பெண்களில் இது 40 சதவீதமாக இருக்கிறது’ என்று கூறப்பட்டிருக்கிறது

கிராமத்து பெண்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மேலும் கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் அதிகமாக இருப்பதால் இது போன்ற தவறுகள் அதிகம் நடைபெறுகிறது. பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கிராமத்துப் பெண்கள் இதற்கு அப்பாவித்தனமாக பலியா கிறார்கள்’

இந்த ஆபத்தான நிலையை மாற்ற, குடும்பநல அமைச்சகம் இதற்கென பணியாளர்களை நியமித்து கிராமம் கிராமமாகச் சென்று அங்கு வசிக்கும் திருமணமாகாத பெண்களை சந்தித்து இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இது அவர்களுடைய எதிர்காலத்தை காப்பாற்றும் முயற்சியாக வரவேற்கப்படுகிறது.

16 வயதிற்கும் குறைவான பெண்கள், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இன்னொரு ஆய்வு குறிப்பிடுகிறது. அவர்களில் பெரும்பாலான பெண்கள் என்னவென்றே புரியாத வயதில் தங்களிடம் கட்டாய உறவுகொண்டதாக கூறியிருக்கிறார்கள். விளைவுகளை எதிர்கொள்ளும்போதுதான் அதன் தீவிரம் அவர் களுக்கு புரிகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள அஸ்ரா என்ற பெண்கள் பாதுகாப்பு மையத்தின் தலைவியான யாமினி ஸ்ரீவாஸ்தவ் இது பற்றி கூறுகையில், “சிறு வயதிலே பெண்களுக்கு சமூகத்தில் நிலவும் நெருடலான விஷயங்களை பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும்.

விஞ்ஞான ரீதியான விளக்கங்களை அவர்கள் பெறும்போது, அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பாதுகாப்பு சூழலையும் உணர்வார்கள். காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு ஓடிவந்த பெண்கள்தான் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

காதலிப்பது தவறல்ல. பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போவது தவறு. இந்தியாவில் 1000 பெண்களில் 86 பேர் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால் பெண்கள் அனைவரும் இதில் விழிப்புடன் இருக்கவேண்டும்.

திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் அடைவதை தடுக்க கல்வி நிலையங்களும், சமூக அமைப்புகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும்” என்கிறார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers