கன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

Report Print Arbin Arbin in பெண்கள்

சமீப காலமாக பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகள் மீடூ என்ற அமைப்பின் வாயிலாக வெளிவரும் நிலையில் கன்னித்தன்மை பரிசோதனை என்ற பெயரில் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் நீடா. நாடக குழுவில் பாடகியாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று நாடக குழுவில் பயிற்சி முடிய இரவாகியுள்ளது. குடியிருப்புக்கு செல்ல இரண்டு கிலோமீட்டருக்கும் அதிகமாக நடக்க வேண்டும்.

இந்த நிலையில், தோழி ஒருவருடன் நாடக குழு வாகனத்திலேயே செல்ல நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நாடக குழு வாகனத்தில் உடன் பணியாற்றும் இரு ஆண் நண்பர்களுடன் குடியிருப்பு வந்து சேர்ந்துள்ளார் நீடா.

ஆனால் அதன் பின்னர் தான் புயலே ஆரம்பமானது. காரில் வந்த நபர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பு இருப்பதாக வதந்தி பரவியது.

நீடாவிடமும் அவளது தோழியிடமும் உறவினர்கள் கடுமையான விசாரணைகள் நடைப்பெற்றன. செய்யாத தவறுக்கு பரிசோதனை எல்லாம் செய்தார்கள்.

இறுதியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்தியதில் நீடாவின் கன்னித்தன்மை கழியவில்லை என்று தெரியவர புயலை ஏற்படுத்திய விடயம் முடிவுக்கு வந்தது.

ஆனால் நீடா இந்த விடயத்தை அப்படியேவிடவில்லை தனக்கு எதிராக நடந்த அநீதிக்கு நியாயம் வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆப்கான் நாட்டில் பல சமூகங்களில் இன்றும் இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.

திருமணம் முடித்த தம்பதிகள் முதலிரவுக்கு செல்லும் அறைக்கு வெள்ளை நிற போர்வையை கொடுத்து அனுப்புகிறார்கள்.

அதிலேயே அவர்கள் உறவு கொள்ள வேண்டும். அந்த போர்வையில் ரத்தத் துளிகள் இருக்க வேண்டுமாம். அப்படியிருந்தால் பெண் கன்னித்தன்மை உடைவள் என்று அர்த்தம்.

இதே ரத்த துளிகள் இல்லையென்றால் திருமணத்திற்கு முன்பே இந்த பெண் வேறு யாருடனோ உறவு கொண்டிருக்கிறாள் என்று முடிவு செய்து புகுந்து வீட்டில் ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகிறார்கள்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers