வெள்ளைப்படுதல் பிரச்சனையா? அற்புதமான தீர்வு

Report Print Printha in பெண்கள்

பெண்களுக்கு நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்ற காரணத்தினால் வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுகிறது.

ஆனால் சில நேரங்களில் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் நமைச்சலும், துர்நாற்றமும் கூட உண்டாகிறது.

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான தீர்வு என்ன?
  • கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, அதை தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
  • இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து, அதை குடித்து வர வேண்டும்.
  • ஜவ்வரிசியை வேகவைத்து, அதனுடன் பால் சேர்த்து, அதை 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வர, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • இளநீரில் 1 ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டிக் குடித்து வர, வெள்ளைப்படுதல் பிரச்சனை விரைவில் குணமாகலாம்.
  • பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, அதில் 1/2 ஸ்பூன் தேங்காய் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.
குறிப்பு

தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு ஆகிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers