பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான முன் தோன்றும் அறிகுறிகள்

Report Print Jayapradha in பெண்கள்

தற்போதைய காலத்தில் ஆண்களை விட பெண்களை தான் மாரடைப்பு அதிகமாக தாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

அதற்கு பெண்கள் தங்கள் உடல் நிலையை சரியாக பாதுகாக்காமல் விடுவதே முக்கிய காரணமாகும். எனவே பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் தோன்றும் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.

பெண்களுக்கு மாரடைப்பு வரும் முன் தோன்றும் அறிகுறிகள்?

  • திடீரென நெஞ்சு அடைப்பது போன்று தோன்றும் அறிகுறிகள் வாய்வு பிடிப்பாக இருந்தாலும் அந்த அறிகுறியோடு மூச்சடைப்பு இருந்தால் அது மாரடைப்பு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

  • ரத்தம் சரியாக இதயத்தில் பம்ப் செய்ய முடியாமல் போகும் போது சோர்வு உண்டாகிறது. அதனால் அதிக சோர்வு நிலை இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும்.

  • தாங்க முடியாத தசை மற்றும் தோள்பிடிப்பு இருந்தால் இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

  • ஹார்மோன் மாற்றத்தினால் தூக்கமின்மை உண்டாகலாம், ஆனால் அப்பிரச்சனை மன அழுத்தம், இதய பாதிப்புகள் இருக்கும் போது கூட தூக்கமின்மை ஏற்படும்.

  • கை, கால்கள் திடீரென வியர்க்க தொடங்கும். அதோடு திடீரென படபடப்பு, தலைசுற்றல் மற்றும் கை கால் நடுக்கம் போன்ற பாதிப்புகள் கூட மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

  • இடது பக்கம் முழுவதும், தோள் பட்டையில் இருந்து கால் வரை ஒரு பக்கமாகவே வலித்தால் மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம், இந்த அறிகுறி மாரடைப்பு வருவதற்கும் ஒரு சில நாட்களுக்கு முன் தோன்றும்.

  • மாரடைப்பு வருவதற்கும் சில நாட்களுக்கு முன் திடீரென நாள் முழுவதும் அடி வயிற்றில் இருந்து நெஞ்சு வரை எரிச்சல் இருக்கும் இவையும் மாரடைப்பின் ஒரு அறிகுறியே.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers