30 வயதிற்கு மேல் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

Report Print Jayapradha in பெண்கள்

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம்.

இதனால் எதிர் காலத்தில் எந்த கடுமையான நோயும் ஏற்படாமல் நலமுடன் வாழலாம். அப்படி பெண்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டிய சில முக்கிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இரத்த அழுத்தம் மற்றும் இருதயம்

பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளில் ஒன்று தான் இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பது. மேலும் இருதய ஆரோக்கியத்தைப் பரிசோதித்துப் பார்ப்பது அவசியம்.

எலும்பு அடர்த்தி

பெண்களின் உடலில் வைட்டமின் டீ சத்து குறைவாக இருந்தால் அவர்களின் எலும்பு பலவீனமாக இருக்கும்.இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். எனவே எலும்பு அடர்த்தி பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

தைராய்டு பரிசோதனை

கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஹைபோ மற்றும் ஹைபர் தைராய்டின் அறிகுறிகளாகும். எனவே 30 வயதை கடந்த பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்தே ஆக வேண்டும்.

நீரிழிவு நோய் பரிசோதனை

30 வயதை அடைந்த பெண்கள் நிச்சயம் நீரிழிவு நோய் பரிசோதனையை மேற்கோள்வது அவசியம். இல்லையென்றால் இது கர்ப்பக் காலத்தில் ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.

மேமொகிராம்

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க 30 வயதிலேயே மேமொகிராம் பரிசோதனை செய்துக் கொள்வதன் மூலம் ஆபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.

பேப் ஸ்மியர் சோதனை

பெண்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் ஒன்று தான் இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய். எனவே 30 வயதிற்கு மேல் எல்லாப் பெண்களும் நிச்சயம் பேப் ஸ்மியர் சோதனை செய்தே ஆக வேண்டும்.

இரத்த சோகை

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை பிரச்சனை ஏற்படக்கூடும். எனவே 30 வயதை அடைந்ததும் இரத்த சோகை உள்ளதா என்று ஒரு இரத்த பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்