அடேங்கப்பா! இத்தனை கோடிகளா.. விற்கப்பட்ட பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள்

Report Print Kabilan in பெண்கள்

ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படங்கள் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸிற்கும் ஜொத்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

ஆனால், இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு காரணம், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகை நிறுவனம் ஒன்று, இவர்களின் திருமண புகைப்படங்களின் உரிமையை ரூ.18 கோடிக்கு வாங்கியிருந்தது.

இந்நிலையில், தற்போது பிரியங்கா-நிக் ஜோனஸின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியொக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஒருபுறம் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், திருமண புகைப்படங்களின் உரிமையை விற்பனை செய்ததை சிலர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்