பெண்களுக்கு கர்ப்பபையில் நீர்கட்டி எப்படி உருவாகிறது? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Report Print Jayapradha in பெண்கள்

இன்றைய காலத்தில் அதிகளவாக பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கர்ப்பப்பை நீர்க்கட்டி.

இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படுவதுடன் கருவுறுதிலும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகின்றது.

இதனை மிக எளிமையான இயற்கையான முறைகளின் மூலம் சரிசெய்யலாம். மேலும் எந்தவொரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதுடன் விரைவில் நல்ல பலனும் கிடைக்கும்.

கர்ப்பபையில் நீர்கட்டி எப்படி உருவாகிறது?
 • பெண்களுக்கு பொதுவாக கர்ப்பபையில் சின்ன முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன்களின் சுழற்சிக்கு உட்பட்டு உடைவதன் மூலம் மாதவிடாய் ஏற்படுகிறது.
 • சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது.
 • சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.
 • பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.
 • பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே ஏற்படுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும்.
கருப்பை நீர்க்கட்டியை கரைக்கும் இயற்கையான வழிகள்
 • வெதுவெதுப்பாக இருக்கும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி, அதை அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் 15 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்த முறையை அடிவயிறு வலி எடுக்கும் போது செய்தால், உடனடி பலன் கிடைக்கும்.
 • தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்
 • சீமைச்சாமந்தி டீயை தினமும் 3 கப் குடித்து வர வேண்டும். ஏனெனில் சீமைச் சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைப்பதுடன், அதனால் ஏற்படும் வலியையும் நீக்குகிறது.
 • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் நீர்க்கட்டிகள் மறைந்து, வலியும் குறைந்து விடும்.
 • ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாறில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.
 • தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.
 • தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்