பெண்களின் மாதவிடாய் சுழற்சி தாமதம் அடைவதற்கு இவைதான் காரணமாம்

Report Print Jayapradha in பெண்கள்

இயற்கை நிகழ்வான மாதவிடாய் சுழற்சியானது பெண்களுக்கு 28-35 நாட்களுக்குள் மாதந்தோறும் தவறாமல் ஏற்படுகிறது.

ஆனால் இந்த மாதவிடாய் சுழற்சியானது, 40 நாட்களுக்கு மேல் வராமல் இருந்தால், அவர்களின் உடல் நிலையானது ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தமாகும்.

எனவே தாமதமான மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் உடனே மருத்துவரை பார்த்து அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.

மாதவிடாய் தாமதம் அடைவதற்கு காரணம்

  • பெண்களின் அதிகமான மன அழுத்தம் காரணமாக, அவர்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சுரப்புகள் குறைகிறது. இதனால் கருமுட்டைகள் உருவாவது தாமதமடைந்து மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  • பெண்களின் உடல்நிலைகள் திடீரென சரியில்லாமல் போவதால், ஏதேனும் நோய்களின் வெளிப்பாடாக மாதவிடாய் வருவது தாமதம் அடைகிறது.

  • அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, இரவு மற்றும் பகல் நேரம் என்று ஷிப்டுகள் அடிக்கடி மாறுவதால், தாமதமான மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  • கர்ப்பத்தடை மருந்துகளை பயன்படுத்துதல் அல்லது புதிய மருந்துக்களை சாப்பிடுவதன் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் காரணமாக மாதவிடாய் தாமதம் அடைகிறது.

  • பெண்கள் அளவுக்கு அதிகமாக உடல் எடையை கொண்டிருந்தால், அவர்களின் உடம்பில் உள்ள ஹார்மோன்கள், மாதவிடாயின் சுழற்சியை மாற்றி அமைத்து, அல்லது மாதவிடாய் ஏற்படுவதை நிறுத்தி விடுகிறது.

  • நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் ஆரோக்கியம் அற்றதாக இருந்தால், நமது உடம்பிற்கு போதுமான ரத்தம் கிடைக்காது. எனவே உடம்பிற்கு போதுமான ரத்தமின்மைக் காரணமாக மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

  • ஹார்மோன் உற்பத்திக்கு தேவைப்படும் கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக நம் உடம்பில் அதிகரிக்கும் போது சமநிலையற்ற ஹார்மோன்கள் உருவாகி மாதவிடாயில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • நம் உடம்பிற்கு தேவையான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமல் இருந்தால், அது ஹார்மோன் சுரப்புகளை பாதித்து, காலதாமதமான மாதவிடாய் பிரச்சனைகள் கொண்டு வருகிறது.

  • பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் உட்கொள்ளாததால், நம் உடம்பில் ரத்தம் தேவையான அளவு சுரக்காமல் இருக்கும், இதனால் மாதவிலக்கு தாமதமாக வருகிறது.

  • பெண்களில் குறிப்பிட்ட வயதிற்க்கும் மேல் உள்ளவர்களின் உடம்பில் மெனோபாஸ் சுருங்குவதால், மாதவிடாய் சீரற்றதாகவும், வராமலும் இருக்கும், இதனால் எவ்வித பிரச்சனைகளும் உண்டாகாது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers