சிசேரியன் செய்து கொண்ட பெண்களின் கவனத்திற்கு... கண்டிப்பாக இதை தெரிந்துகொள்ளுங்கள்!

Report Print Jayapradha in பெண்கள்

சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால் அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது தான் மிகவும் கடினம்.

சிசேரியன் பற்றிய உண்மைகள்
 • ஆரம்பக் காலக்கட்டதில் மிகவும் முடியாத நிலைமை குழந்தை அல்லது தாய்க்கு பிரச்சனை என்றால் மட்டும் தான் சிசேரியன் செய்தனர். இதற்காக தான் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசேரியன் செய்வது சர்வசாதாரணமாக இருக்கிறது.
 • நாற்பது வருடங்களுக்கு முன்னர் 20 குழந்தைகளில் ஒரு குழந்தை சிசேரியன் முறையில் பிரசவம் செய்யப்பட்டது. இன்று மூன்றில் ஒரு குழந்தை சிசேரியன் மூலமாக பிரசவம் செய்யப்படுகிறது.
 • சுகப்பிரசவத்தை விட சிரியன் எளிமையாக இருக்கும், வலி குறைவாக இருக்கும் என பலர் எண்ணுகின்றனர்.

 • மேலும் சுகப்பிரசவம், சிசேரியன் செலவு ஒப்பிடுகையில், மருத்துவ செலவில் இருந்து, மருத்துவமனை செலவு, ஆரோக்கியம் சார்ந்த செலவுகள் என சிசேரியன் தான் அதிக செலவு வைக்கும்.
 • சிசேரியன் பிரசவத்தை பொறுத்தவரையில் அந்த நேரத்தில் குழந்தை பிறப்பது சுலபமாக இருந்தாலும், அதன் பின்னர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
 • சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.
சிசேரியன் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்
 • சிசேரியன் மேற்கொண்டால் பல வாரங்களுக்கு படுக்கையிலேயே இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
 • சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு தாமதப்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • சிசேரியன் செய்யும் போது தான் தொற்று, இரத்தம் கட்டுதல், கட்டிகள் உருவாதல், இரத்தப்போக்கு அதிகமாதல், என நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 • சிசேரியன் மேற்கொண்ட பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கின் காலம் 1.5 மாதங்களுக்கு இரத்தக்கசிவு நிகழும்..
 • சிசேரியன் செய்த பெண்கள் மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
 • சிசேரியன் செய்து கொள்ளும் பெண்களால், குனிந்து, நிமிர்ந்து வேலை செய்ய இயலாத நிலை ஏற்படும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்