பெண்களுக்கு அதிகமாக வெள்ளைப்படுவதற்கு என்ன காரணம்? தடுக்க என்ன செய்யலாம்?

Report Print Jayapradha in பெண்கள்
311Shares

வெள்ளைப்படுவது என்பது இயல்பான ஒரு நிகழ்வு. இது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக்க உதவுகிறது.

மேலும் வெள்ளைப்படும் போது அதிகப்படியான நிற வேறுபாடு, துர்நாற்றம், அதிகப்படியான வயிற்றுவலி, பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் வலி ஆகியவற்றை சந்திக்க நேரிட்டால் அது பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றுக்களின் காரணமாக இருக்கலாம்.

வெள்ளைப்படுதலுக்கான காரணங்கள்
 • இதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்கங்கள். அதவாது கெட்டுப்போன உணவுப் பொருட்களை உண்ணுதல்.
 • அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப்படுதல் உண்டாகிறது.
 • தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படலாம்.
 • சுகாதாரமற்ற உள்ளாடைகளை அணிதல் மற்றும் சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
 • சிலருக்கு பூஞ்சை நோய் தொற்றால் வெள்ளைப்படலாம். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
 • மேலும் சில பெண்கள் மாதவிடாய் வராத நேரங்களில் அடிக்கடி மாதவிடாய் தூண்டும் மாத்திரைகளை உண்ணுதல் போன்றவற்றால் கூட ஏற்படலாம்.
 • உடலில் அதிக உஷ்ணம், அதிக உடலுறவில் இடுபடுதல், கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.
வெள்ளைப்படுதலுக்கான தீர்வுகள்
 • பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.
 • உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
 • 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்நீர் குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
 • வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.
 • ஒரு வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிர்ந்ததும் அந்நீரை வடிகட்டி அதை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
 • மாம்பழத்தின் தோலை அரைத்து அதனை யோனியில் தடவி வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 • வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.
 • ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.
குறிப்பு
 • மாதவிடாய் நின்றவர்களுக்கும் வயதானவர்களுக்கும் வரும் வெள்ளைப்படுதல் மிக ஆபத்தானது, இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும்.
 • எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்