கர்ப்பிணி பெண்கள் எதற்காக மீன் எண்ணெய் சாப்பிட வேண்டும் தெரியுமா?

Report Print Jayapradha in பெண்கள்

மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், விட்டமின் ஏ, டி மற்றும் விட்டமின் பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 100 கிராம் மீன் எண்ணெய்யில், நிறைவுற்ற கொழுப்பு - 21 கிராம், நிறைவுறதாக கொழுப்பு 16 கிராம் உள்ளன.

மீன் எண்ணெயின் மருத்துவ பயன்கள்
கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண் பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

மேலும் இந்த எண்ணெயில் ஒமேகா-3 பேட்டி ஆசிட் இருப்பதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

கண்களின் ஆரோக்கியம்

மீன் எண்ணெய் உட்கொண்டு வந்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும்.மேலும் இவை மாலைக்கண், பார்வை குறைபாடு மற்றும் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றிலில் இருந்து காக்க உதவும்.

இதய ஆரோக்கியம்

மீன் எண்ணையில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைக்க உதவும். மேலும் இதய உங்களின் இரத்த குழாயில் கொழுப்பை தங்குவதை தடுக்க உதவும்.

உடல் எடை குறைக்க

மீன் எண்ணையில் உள்ள நல்ல கொழுப்பு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உடல் எடையினை குறைக்க உதவும்.மேலும் உங்கள் உடலில் கொழுப்புகள் தங்காதவாறு தடுக்கும்.

முடி உதிர்வதை தடுக்க

தினமும் மீன் எண்ணெய் உண்டு வந்தால் முடி வலுவின்மை போன்ற பிரச்சினைகள் நீங்கி உங்கள் முடியினை ஆரோக்கியமாக வைக்கும்.

நகங்களின் ஆரோக்கியம்

நகங்களின் வளர்ச்சிக்கு மற்றும் ஆரோக்கியமான நகங்களை பெற தினமும் மீன் எண்ணெய் எடுத்துக்கொள்ளுங்கள்

சரும ஆரோக்கியம்

வயதான மற்றும் சுருக்கமான தோல் ஏற்படுவதை தடுத்து உங்களை எப்போதும் இளமையுடனும் மற்றும் ஆரோக்கியமுடனும் வாழ வலி வகுக்கின்றது.

மூளையின் வளர்ச்சி

தினமும் மீன் எண்ணெயினை எடுத்துக்கொண்டு வந்தால் உங்கள் மூளையின் செயல் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என பலவித ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மூட்டுகளின் வலிமைக்கு

மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் மீன் எண்ணெயினை உட்கொண்டு வந்தால் உங்களின் மூட்டுக்களில் ஏற்படும் வலி குறையும். மேலும் மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டு அழற்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து தடுக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்