கோஹ்லி கேல் ரத்னா விருது வாங்கிய போது அனுஷ்கா ஏன் புடவை கட்டி வந்திருந்தார் தெரியுமா?

Report Print Santhan in பெண்கள்

விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருது சமீபத்தில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லிக்கு குடியரசு தலைவரால வழங்கப்பட்டது.

இந்த விழாவிற்கு கோஹ்லியின் தாய், சகோதரர் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விராட் விருது வாங்க சென்ற போது, இருக்கையில் இருந்த அனுஷ்கா கை தட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இந்த விழாவிற்கு எப்போதும் எதிர்பாரத வகையில் அனுஷ்கா சேலை அணிந்து வந்திருந்தார். அனுஷ்காவை சேலையில் பார்ப்பது மிகவும் அரிது.

அப்படி இருக்கையில் இன்று சேலை அணிந்திருக்கிறாரே அதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற போது, கோஹ்லிக்கு அனுஷ்கா புடவைக் கட்டினால் மிகவும் பிடிக்குமாம், அதன் காரணமாகவே வெளி நிகழ்ச்சிகளில் அவர் அருகில் இருக்கும் போது அனுஷ்கா புடவை கட்டிச் செல்கிறார்.

மேலும் இந்த விழாவில் அனுஷ்கா டஸ்ஸர் ஜார்ஜெட் புடவை. வுட்டன் கலர் புடவையின் ஓரத்தில் டில்லா பார்டரும் மேட்சாகக் கறுப்பு நிற ஹசார் பல்ட்டி பிளவுஸூம் அணிந்திருந்தார்.

காதில் அணிந்திருந்த போல்கி தோடுகளின் பளபளப்பு அவருடைய மகிழ்ச்சியை இன்னமும் அதிகப்படுத்திக் காட்டியது என்றே கூறலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers