பெண்களை தாக்கும் யோனித்தொற்று நோயை குணப்படுத்துவது எப்படி?

Report Print Jayapradha in பெண்கள்

யோனியின் உட்புறம் ஈஸ்ட் எனப்படும் காடிச்சத்து இருப்பதால் இவை சில கெட்ட பக்டீரியாக்கள் உடலில் தங்கும் போது இந்த ஈஸ்டின் அளவு கூடிப்போய் அது தொற்றாக மாறுகிறது.

பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுக்களால், அரிப்பு, துர் நாற்றம், வலி மற்றும் கசிவு ஆகியவை ஏற்படுவதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.

யோனித்தொற்றின் முக்கிய காரணங்கள்
 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவான அளவு இருக்கும்.
 • பெண்களுக்கு பிரசவ காலத்தில் பெண்மை சுரப்பிகளின் முறையற்ற வளர்ச்சி மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் சில மாற்றங்கள்.
 • ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், போதிய தூக்கமின்மை மற்றும் உடலில் சர்க்கரையின் அளவு சமநிலையிலில்லாதிருத்தல்.
 • அதிக அளவு கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் நோய்க்கொல்லி மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல்
யோனித்தொற்றுக்கான அறிகுறிகள்
 • பிறப்புறுப்பில் அதிகப்படியான எரிச்சல், அரிப்பு, வலிகள் மற்றும் பலவிதமான கோளாறுகள் இருக்கும்.
 • சிறுநீர் கழிக்கும் போது அல்லது உடலுறவின் போது பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும்.
 • அடர்வான மற்றும் அதிக வெண்மை கொண்ட திரவம் வெளிப்படுதல். மேலும் பிறப்புறுப்பில் சிவப்பு படர்தல் உண்டாகும்.
யோனித்தொற்றுக்கான வீட்டு வைத்திய முறைகள்
பூண்டு
 • பூண்டு ஒரு சிறந்த நுண்ணுயிர் எதிர்ப்புச்சக்தி கொண்ட உணவுப்பொருளாகும் ஒரு பல் பூண்டை இரண்டாக வெட்டி அதனை ஒரு மெல்லிய துணியில் சுற்றி பிறப்புறுப்பில் இரவு முழுவதும் வைத்திருக்கவும்.
 • சில நாட்கள் இதனை தொடர்ந்து செய்தால் குணம் தெரியும். மேலும் இதனை செய்யும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெற மறக்காதீர்கள்.
தயிர்
 • கெட்டித்தயிரில் நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ளது, யோனித்தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாகும். உணவில் தினமும் கெட்டித் தயிரை சேர்த்துக்கொள்ளலாம்.
 • ஒரு தேக்கரண்டி கெட்டித்தயிரை பிறப்புறுப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடவி பின் மெல்லிய துணியணிந்து இரவுமுழுவதும் விட்டுவைக்கவும் ஏதாவது தொந்தரவு இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்
தேங்காய் எண்ணெய்
 • தேங்காய் எண்ணெய்யில் பூஞ்சையை எதிர்க்கும் சக்தி உள்ளது. ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையுடன் ஐந்து சொட்டு லாவெண்டர் ஆயிலை சேர்த்து யோனியில் தடவிக்கொள்ளவும்.
ஆப்பிள் சிடர் வினிகர்
 • ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அமிலங்கள் யோனியை தளர்வாக வைக்கும். சூடான தண்ணீரில் தேவையான அளவு ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து அதில் குளிக்கவும்.
வேப்பிலை
 • வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் இவை உடலுக்கு ஊட்டமளித்து பாக்டீரியாக்களை அழித்து, யோனித்தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
 • ஒரு பக்கெட் இளஞ்சூடான நீரில், ஐந்து துளிகள் வேப்பிலை எண்ணெய் மற்றும் ஐந்து துளிகள் தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து அதில் குளிக்கவும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்