பெண்களே உஷார்! இந்த அறிகுறிகளையெல்லாம் அலட்சியமாக எடுத்துக்காதீங்க

Report Print Jayapradha in பெண்கள்

புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

அதற்கு காரணம் பெண்களுடைய குறைவான நோயெதிர்ப்பு சக்தியும், புற்றுநோய் பற்றிய போதிய விழிப்புணர்வும் இல்லாததும்தான்.

மேலும் பெண்கள் அலட்சியமாக நினைக்க கூடாத சில புற்றுநோயின் அறிகுறிகள் என்னவென்பதை பார்க்கலாம்.

உடல் எடை குறைதல்

திடிரென உடல் எடை தானாக குறைந்தால் அவை நுரையீரல், கணையம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் காரணமாக கூட இருக்கலாம். மேலும் புற்றுநோய் செல்கள் அதிகரிக்க உங்கள் ஆற்றலை எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு எடை இழப்பு ஏற்படலாம்.

வீக்கம்

மாதவிடாயின் போதோ வயிற்று பகுதியில் ஏற்படும் வீக்கம் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் அவை கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் பசியின்மை, அடிவயிற்றில் வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.

மார்பகத்தில் கட்டிகள்

மார்பகப்பகுதிகளில் கட்டிகள் இருந்தாலோ, அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, சிவப்பு நிறத்தில் தடிப்பு, அரிப்பு மற்றும் மார்பகத்திற்கு அடியில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பிறப்புறுப்பில் துர்நாற்றம்

பிறப்புறுப்பில் துர்நாற்றம் வீசுதல், அடர் நிற சிறுநீர், போன்றவை கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகும்.இது மாதவிடாய் காலத்திலோ, அதற்கு பிறகோ ஏற்படலாம். சிலசமயம் இரத்தக்கசிவு கூட ஏற்படலாம்.

அதிகபடியான சோர்வு

உடலில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியின் குறைந்தால் சோர்வு ஏற்படும். மேலும் அதிகபடியான சோர்வு ஏற்பட்டால் அவை வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் இவை இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரித்து பின்னர் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.

காய்ச்சல்

அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் லூக்கோமியா அல்லது லிம்போமா நோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த இரண்டுமே உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இருமல்

தொடர்ச்சியான இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலசமயம் இது மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படலாம். மேலும் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல் இருப்பின் நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும்.

மலத்தில் இரத்தம்

குடலில் ஏற்படும் புற்றுநோய் முதலில் தெரியாவிட்டாலும் வயிற்றுவலி, மலச்சிக்கல், சோர்வு, மலத்தில் இரத்தம் போன்றவற்றின் மூலம் இதனை கண்டறியலாம். இந்த குடல் புற்றுநோய் பெருங்குடல் அல்லது மலக்குடலில் ஏற்படும். இதனால் பெருங்குடலின் அகலம் அதிகரிக்கும்.

மூச்சு திணறல்

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இதனால் உணவுக்குழாயின் அளவு சுருக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்