பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய்: தடுப்பது எப்படி?

Report Print Jayapradha in பெண்கள்

பெண்களை மட்டும் தாக்கக்கூடிய கொடிய நோய்கள் ஒன்று தான் செர்விகள் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.

இந்நோயானது 20 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள எந்த பெண்ணை வேண்டுமானாலும் தாக்கும் வாய்ப்புள்ளது.

இத்தகைய கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை பற்றி பார்க்கலாம்.

கர்ப்பப்பை புற்றுநோயின் காரணங்கள்

 • கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது ஹியூமன் பாபிலோமா வைரஸ் என்னும் வைரஸால் பரவுகிறது.இது பெரும்பாலும் உடலுறவு மூலமே பரவுகிறது. இந்த நோய் தாக்கிய 80 சதவீத பெண்களுக்கு இது உடலுறவு மூலமே பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 • இளம்வயதிலியே அதிக பாலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.

 • 17 வயதிற்கு முன்னரே தாயாகும் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்துக்கள் அதிகம்.

 • பெண்கள் புகைப்பிடிப்பது அவர்களுக்கு செர்விகள் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது.

 • எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த நோய் தாக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ள பெண்களும் எளிதில் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள்.

அறிகுறிகள்
 • இதனை எளிதில் கண்டறிய கூடிய ஒரே அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குதான். இந்த இரத்தப்போக்கு பாலியல் உறவின் போதோ அல்லது மாதவிடாய்க்கு பிறகோ ஏற்படலாம்.

 • மேலும் இடுப்பு பகுதியில் வலி, அதிக சோர்வு, கால்களில் வீக்கம், கீழ்முதுகு வலி போன்றவைகளும் இதன் அறிகுறிகள் ஆகும்.

தடுக்கும் முறைகள்

 • கருப்பையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும்.

 • கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுக்க மிகசிறந்த வழி HPV தடுப்பூசி போடுதல். மேலும் இதனை 9 முதல் 27 வயது வரை உள்ள ஆண், பெண் இருவருக்குமே பரிந்துரைக்கப்படுகிறது.

 • சிறு வயதில் பாலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும், அதே நேரம் பாலுறவின் போது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

 • புகைப்பிடித்தலை நிறுத்துவது உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க சரியான வழியாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers