விட்டத்தை பார்த்தபடி கர்ப்பிணிகள் உறங்கினால் என்னவாகும்?

Report Print Jayapradha in பெண்கள்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது விட்டத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது. அதற்கு காரணம் என்ன என்பதை கூறும் அறிவியலின் வியக்க வைக்கும் உண்மைகளை பற்றி பார்ப்போம்.

அறிவியல் கூறும் உண்மை
  • விட்டத்தை பார்த்து படுத்தால் கருப்பையில் இருக்கும் நீரில் மிதந்துக்கொண்டிருக்கும் தொப்புள் கொடி கருவின் மீது சுற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
  • மேலும் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் 4 ஆம் மாதத்தில் இருந்து தாய்க்கும் சேய்க்கும் தொப்புள் கொடி வலிமை பெற்று இருக்கும்.
  • நின்றுக்கொண்டிருக்கும் போதும், மேல்நோக்கி பார்த்தபடி படுத்திருக்கும் போதும் கருப்பை சுருங்கி இடுப்பு எலும்பில் தாங்கியபடி இருக்கும்.
  • 4 மாதங்களுக்கு பிறகு குழந்தையின் எடை கூடும் நிலையில் விட்டத்தை பார்த்தபடி படுத்தால் தாயின் குடல் மீது அழுத்தத்தை கொடுக்கும். இதனால் அஜீரணம் ஏற்படும். அசவுகரியமாக உணர்வார்கள்.
  • அதிக எடை வயிற்று பகுதியில் இருக்கும் நிலையில் மேல் பார்த்தபடி படுத்தால் இடுப்பு மற்றும் முதுகு எலும்பிலும் அழுத்தம் ஏற்படும்.
  • தாய் பக்கவாட்டில் படுத்திருக்கும் போது வயிற்றில் வளரும் குழந்தை அசைந்து விளையாடும். நடமாடும் போது, அசைவின்றி இருக்கும். இது ஏனென்றால், பக்கவாட்டில் படுத்திருக்கும் போது குழந்தை விளையாட அதிக இடம் கிடைக்கும்.
  • அதனால் கர்ப்பிணிகள் பக்கவாட்டில் படுத்து உறங்குவது தாயுக்கும் சேயுக்கும் மிகவும் நல்லது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்