தினம் தினம் இரவு புதிய ஆண்கள்: பல பெண்களின் குமுறல் இது

Report Print Deepthi Deepthi in பெண்கள்

கொல்கத்தாவின் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை தொழில் மூலதனமாக்கி சோனாகாட்சியில் நடந்து வருகிறது பாலியல் தொழில்.

சோனாகாட்சியில் பாலியல் ஊழியர்களாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் இந்த தொழிலை விரும்பி தேர்ந்தெடுத்ததாக சொல்லவில்லை.

சோனாகாட்சியில் சிக்கிக்கொண்ட ஒரு இளம்பெண்ணின் வார்த்தை ”தினமும் புதிது புதிதாக பெண்களை பிடித்து வருகின்றனர். நாங்கள் தப்பிக்க முடியாமல் தவிக்கின்றோம்.

எங்களுக்கு வெளியில் மக்கள் வாழ்கிறார்கள், ஒரு உலகம் இருக்கிறது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை காரணம் எங்களை மீட்க யாருமே இல்லை”

அவர்கள் ஒவ்வொருவருக்குமே சோனாகாட்சிக்கு வருவதுக்கு காரணமாக, சினிமா சம்பவம் போன்ற பின்னணி கதையும் உண்டு.

வலுக்கட்டாயமாக விற்கப்பட்டவர்கள், வறுமையால் வேறுவழி தெரியாமல் தரகர்களின் சூழ்ச்சியில் வந்து மாட்டிக்கொண்டவர்கள். காலப்போக்கில் அந்த சூழலுக்கு தங்களை சமாதானப்படுத்திக் கொண்டாலும் காலம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்ற காயங்கள், அவர்கள் உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளில் தெரிகிறது.

வயிற்றுக்காக மொத்த உடலை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறுகிய அறைகளில் சுருங்கிய இவர்களது உலகம். ஒரு கூண்டுக்கிளி வாழ்க்கை.

யாருடைய மிருக உணர்ச்சிகளுக்காக இந்த பெண்கள் கைதிகளாக காத்துக் கிடக்கிறார்கள். இதை காம உணர்ச்சிக்கான பரிகாரம், பாலியல் பலாத்காரத்துக்கு ஒரு மாற்றாகும் என்று கூறுவதும் தவறுதான்.

இங்கு ஊழியம் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, பிள்ளைகளின் வாழ்க்கையையும் நாசமாக்கி விடுகின்றனர்.

ஒரு பெண் ஊழியர் தன் மகளை பள்ளியில் சேர்க்கிறார் இனி நீ அம்மாவை அங்கு போய் பார்க்கக் கூடாது என்பது பள்ளி விதிக்கும் கட்டுப்பாடு.

இன்னொரு ஊழியருடைய மகள் கலங்குகிறார், நான் எந்த தப்பும் செய்யவில்லை என் அம்மாவை காரணமாக்கி என்னை எல்லோரும் அவமதிக்கின்றனர்.

பாலியல் ஊழியரான எங்களை ஒதுக்கும் இந்த சமூகம் இங்கு விருந்தினராக வரும் ஆண்களை குற்றவாளிகளாக பார்ப்பதில்லை. இது இன்னொரு பெண்ணின் ஆதங்கம்.

சோனாகாட்சியில் உள்ள 10 ஆயிரம் பெண் பாலியல் ஊழியர்களை மீட்பதுதான் பெண்ணுரிமை பேசும் மகளிர் அமைப்புகளின் முதல் கடமையாக இருக்க முடியும்.

கசாப்பு கடைகளில் இறைச்சியை விலையாக்க, அவற்றின் உயிர்கள் போவதை பொருட்படுத்துவதில்லை. அதுபோல, ஒரு பெண்ணுடைய சகல திறமைகளும் இருட்டடைப்பு செய்யப்பட்டு உடல் மட்டுமே உரச பயன்படுத்தப்படுகிறது.

பெண்மை ஒரு தேனருவி, அது எல்லா காலத்திலும் எல்லோராலும் குளிக்கப்படும் நீரருவி அல்ல.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்