புகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை குறிப்புகள்

Report Print Jayapradha in பெண்கள்

மர்லின் மன்றோவின் இயற்பெயர் நார்மா ஜேன் என்பதே ஆகும்.

இவருக்கு சிறிவதில் இருந்தே தனது தந்தையர் யார் என்பதே தெரியாது. மேலும் இவர் குழந்தை பருவத்தில் இருந்தே காப்பகத்தில் வளர்ந்து வந்ததாகவும் மேலும் இவருக்கு 11 ஜோடியினர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.

இவருக்கு ஜேன் அடைர் என்ற பெயரெ மிகவும் பிடிக்கும் அன்பதால் இவர் திரையில் தனது பெயரை ஜேன் அடைர் என்று தான் வைத்துக் கொள்ள விரும்பினாராம். ஆனால், கடைசியில் மர்லின் மன்றோ என்ற பெயர் இவருக்கு திரை பெயராக சூட்டப்பட்டது என அறியப்படுகிறது.

மர்லின் மன்றோ தனது பதின் வயதிலேயே நிச்சயிக்கப்பட்டு திருமண உறவில் இணைந்தாரம். அவர் சாதாரண வேலை செய்துக் கொண்டிருந்த மர்லினை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்த போட்டோ மூலமாக மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் விவகாரத்து செய்து கொண்டார்.

பிறவியிலேயே அழகான தோற்றம் கொண்ட மர்லின். ஆனால், இவரது ஏஜண்டான ஜானி ஹைட் என்பவரின் வற்புறுத்தல் காரணமாக இரண்டு முறை மூக்கு நுனி மற்றும் கன்னம் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.

மர்லின் மன்றோவுக்கு பெரும் புகழை தேடி தந்தது டைமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்ஸ் பெஸ்ட் பிரெண்ட் என்ற புகழ் பெற்ற பாடல் தான். மர்லின் நகைகள் மீது பெரும் ஈர்ப்பு இல்லாதவர் அதனெலே ஒரே ஒரு வைர மோதிரம் மற்றும் முத்துக்கள் மட்டுமே இவர் பயன்படுத்தி வந்தார் என்றும் கூறப்படுகின்றது.

மர்லின் மன்றோ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தி பிரன்ஸ் அண்ட் தி ஷோ கேர்ள் என்ற ஒரே படத்தை மட்டும் தயாரித்திருந்தார். மேலும் இவர்தான் ஆரம்பக் காலக்கட்டத்தில் திரை துறையில் தனக்கான சொந்த தயாரிப்பு கம்பெனி வைத்திருந்த பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது.

அதற்கு பிறகு நாடக கதையாசிரியர் ஆர்தர் மில்லர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். மேலும் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது மர்லினின் நீண்ட நாள் கனவு, ஆசை. ஆனால், இவர் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது.

தனது நடிப்பு திறனுக்காக பலமுறை பாராட்டுகள் பெற்றுள்ளார் மர்லின் மன்றோ. இவர் நடித்த சம் லைக் இட் ஹாட் என்ற படத்தில் சுகர்கேன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் மர்லின் மன்றோ.

புகழின் உச்சியில் இருந்த போது மை ஸ்டோரி என்ற பெயரில் தனது சுய சரிதையை இவரது நண்பர் திரைக்கதை ஆசிரியர் பென் ஹெச்ட் இணைந்து மர்லின் மன்றோ அந்த புத்தகத்தை எழுததினார். இவர் இறந்த பல வருடங்கள் ஆன போதிலும் கூட அந்த புத்தகம் வெளியாகவில்லை என்று அறியப்படுகிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்