அன்று தெருக்களில் மீன் விற்ற மாணவி... இன்று மக்களின் மகள்: நெகிழ்ச்சி கதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்

கேரளாவில் தெருக்களில் மீன் விற்று கல்லூரிக்கு சென்ற மாணவியின் வாழ்க்கை கதை அம்மாநில மக்களின் கவனத்தையும் பெற்று இன்று கேரள மாநிலத்தின் மகளாக கொண்டாடப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (வேதியியல்) இறுதியாண்டு படிக்கிறார். இவரது தந்தை குடும்பத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தாயாருக்கு மனநிலை சரியில்லை.

இதன் காரணமாக, மாலை நேரத்தில் மீன் விற்று குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் ஹனன். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் மாத்ருபூமி நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே யாரிடமும் உதவி கேட்காமல், படித்துக்கொண்டே உழைக்கும் ஹனனின் கதையை படித்த பலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது.

இவர், மீன் விற்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். இயக்குனர் அருண் கோபி, அவருக்கு நடிக்க வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹனனின் செயலை கண்டு பெருமை பட வேண்டும். அவர் தன்னை மட்டுமல்ல, பல்வேறு வேலைகள் செய்து படித்துக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.

அவரது வாழ்க்கை கதையை கேட்டு பெருமையாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைப்பதற்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு, கேரள மக்களின் கவனத்தையும் ஈர்த்த ஹனரை, கேரளத்தின் மகள் என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து கேரள காதி வாரியம், ஓணம்-பக்ரீத் காதி விழாவை நேற்று நடத்தியது. இதில் நடந்த பேஷன் ஷோவில் காதியின் விதவிதமான உடைகளை அணிந்து ஹனன் பூனை நடந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்