சூறாவளிகளின் வலிமை இனி தொடர்ந்து அதிகரித்துச் செல்லும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in காலநிலை
154Shares

கடந்த வாரம் ஆம்பன் புயல் ஆனது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரைப் பகுதிகளில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே.

அதுமாத்திரமன்றி இந்த புயல் ஆனது “சுப்பர் புயல்” (Super Cyclone) என பின்னர் பெயர் பெற்றிருந்தது.

இதற்கு காரணம் மணிக்கு 240 கிலோ மீற்றர்கள் எனும் வேகத்தினை அடைந்திருந்தமையாகும்.

இதன் பின்னர் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 40 வருடங்களில் ஏற்பட்ட சூறாவளி தொடர்பான தகவல்களை ஆய்வு செய்துள்ளனர்.

இந்த தரவுகளின்படி முன்னைய காலங்களை விடவும் தற்போது சூறாவளிகளின் வேகமானது அதிகரித்து வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காலநிலை மாற்றமே காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1979 ஆம் ஆண்டிலிருந்து சராசரியாக ஒவ்வொரு தசாப்தங்களின் பின்னரும் உருவாகும் சூறாவளிகளின் வேகம் 8 சதவீதத்தினால் அதிகரித்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்