அடுத்த 5 வருடங்களுக்கு நினைத்துப் பார்க்காத அளவிற்கு கடும் வெப்பம் நிலவலாம்

Report Print Givitharan Givitharan in காலநிலை

கடந்த நான்கு வருடமும் முன்னெப்போதுமில்லாத அளவிற்கு கடும் வெப்பம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது கணிப்புக்கள் அடுத்த 5 வருடங்களும் கடும் வெப்பநிலை நிலவக்கூடும் என சொல்லுகின்றன.

புவி வெப்பநிலை அதிகரிக்கின்றது, இதன் கருத்து ஒவ்வொரு வருடமும் அதன் முன்னைய வருடங்களிலும் பார்க்க அதிக வெப்பநிலையைக் கொண்டிருக்கும் என்பதல்ல.

ஒட்டுமொத்தமாக வெப்ப நிலை அதிகரிக்கும் போக்கு காணப்பட்டாலும், இதன் கருத்து அடுத்தடுத்துள்ள தசாப்பதங்களுக்கிடையில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டாலும், தனித் தனி வருடங்களுக்கிடையில் தளம்பல்கள் காணப்படுகின்றன.

தற்போதைய ஆய்வொன்று 2018 - 2022 வரையிலான காலப்பகுதியில் புவியின் வெப்நிலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என சொல்லுகின்றது.

நாஸாவின் தரவுகளின் படி இதுவரையிலும் 2016 காலப்பகுதியே மிக வெப்பம் கூடிய காலமாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. அடுத்த நிலைகளில் 2017, 2015, மற்றும் 2014 உள்ளன.

வருங்காலங்களில் ஏற்படவிருக்கும் இவ் வெப்பநிலை மாற்றங்களுக்கு பச்சை இல்ல விளைவுக்கு மேலாக ஏற்றபடும் உள்ளார்ந்த மாறல்களும் காரணமாகலாம் என சொல்லப்படுகின்றது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்