நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் அடைமழை

Report Print Vethu Vethu in காலநிலை
137Shares
137Shares
ibctamil.com

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினமும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் இன்று மாலை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றரை தாண்டிய அடை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

மழை பெய்யும் நேரத்தில் 70 - 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்