பட்டப்பகலில் மருத்துவமனையில் இளம்பெண்ணை சீரழிக்க முயன்ற மர்ம நபர் இவர்தான்

Report Print Balamanuvelan in அமெரிக்கா
336Shares

அமெரிக்காவில் மருத்துவமனைக்கு சென்ற பதின்ம வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழிக்க முயன்ற காட்சி கமெராவில் பதிவாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புரூக்ளினிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் பெற ஒரு தாயும் மகளும் சென்றிருக்கிறார்கள்.

அப்போது, அந்த பதின்ம வயது பெண் தன் ஸ்கூட்டரை கொண்டு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்.

அப்போது திடீரென ஒரு நபர் அவளைப் பிடித்து கீழே தள்ளி அவளை வன்புணர முயன்றிருக்கிறார்.

பயங்கரமாக சத்தமிட்டபடி அந்த பெண் போராடியதால், அந்த மர்ம நபர் அவளை விட்டு விட்டு ஓடியியிருக்கிறார்.

இந்த காட்சிகள் மருத்துவமனையிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியிருந்தன. பிரபலமான ஒரு மருத்துவமனையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ காட்சிகளையும், அந்த நபரின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொலிசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இந்நிலையில், நேற்று காலை இந்த கொடூர சம்பவம் தொடர்பாக David Gonzalez (31) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது வன்புணர்வு முயற்சி, அத்து மீறி தொடுதல் மற்றும் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே Gonzalez பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு, 19 முறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்