உலகை வழிநடத்த தயார்: புதிய அமைச்சரவை உறுப்பினர்களை அறிமுகம் செய்து ஜோ பைடன் பேச்சு

Report Print Arbin Arbin in அமெரிக்கா

எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், ஜோ பைடன் தமது அமைச்சரவை உறுப்பினர்களை இன்று நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தேர்தல் முடிந்து நீண்ட இழுபறிகளுக்கு முடிவில் நடப்பு ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு, புதிய ஜனாதிபதி பொறுப்புகளை ஒப்படைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி டிரம்பின் இந்த முடிவை வரவேற்றுள்ள ஜோ பைடன் தரப்பினர், அடுத்த கட்ட நடவடிக்கையாக இன்று, புதிய அமைச்சரவை உறுப்பினர்களை நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் பேசிய ஜோ பைடன், அமெரிக்கா திரும்பிவிட்டது, உலகை வழிநடத்த தயாராக உள்ளது என அறிவித்தார்.

இதற்கிடையில் வெள்ளை மாளிகை நிர்வாகமானது ஜோ பைடன் நாட்டின் உயர் ரகசிய புலனாய்வு தகவல்களைப் பெற அனுமதித்தது.

மட்டுமின்றி, இனி முதல் நாள் தோறும் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றும் உரையை ஜோ பைடன் ஆற்றுவார் எனவும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன், தமது அமைச்சரவை உறுப்பினர்களாக, ஜனாதிபதி பராக் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய முக்கியமானவர்களையே தெரிவு செய்துள்ளார்.

  • Antony Blinken, Secretary of state
  • John Kerry, Climate change envoy
  • Avril Haines, Director of national intelligence
  • Alejandro Mayorkas, Secretary of homeland security
  • Jake Sullivan, White House national security adviser
  • Linda Thomas-Greenfield, US ambassador to the UN

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்