தனது மகளை பராமரிப்பாளர் துஷ்பிரயோகம் செய்ததாக பொய் புகார் கூறிய 25 வயது தாயார்! வெளியான அதிரவைக்கும் காரணம்

Report Print Raju Raju in அமெரிக்கா
253Shares

அமெரிக்காவில் தனது 2 வயது மகள் மீது நபர் ஒருவர் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தினார் என தாயார் புகார் கூறிய நிலையில் அது பொய் என தெரியவந்துள்ளது.

Tiffany Brianne Wolford என்ற 25 வயது பெண் பொலிசில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், என் 2 வயது பெண் குழந்தையை பராமரிக்கும் நபர் அவளிடம் பாலியல் தாக்குதல் நடத்தினார், அவள் உடலில் இரத்தம் இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்தது என கூறினார்.

இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை செய்த நிலையில் Tiffany Brianne Wolford கூறியது அனைத்தும் பொய் என தெரிந்தது.

குழந்தையை கவனித்து கொண்ட அந்த நபர் அவளின் தந்தையா என தெரியவில்லை.

Tiffany Brianne Wolford அளித்த வாக்குமூலத்தில், என் மகளோடு நான் பேசுவதற்கு அவர் அனுமதி தரமாட்டார், இதோடு குழந்தையை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை.

இந்த கோபத்தில் தான் அவர் மீது பொய் புகார் கூறினேன் என தெரிவித்து அதிர வைத்தார்.

இதை தொடர்ந்து பொலிசார் Tiffany Brianne Wolford-ஐ கைது செய்தனர்.

ஆனால் அவர் ஜாமீனில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்