கணவர் இறந்த 7 மாதம் கழித்து அவர் குழந்தையை பெற்றெடுத்த மனைவி! பிரசவத்தின் போது அவர் உடன் இருந்ததாக உருக்கம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் கணவர் விபத்தில் உயிரிழந்த 7 மாதங்கள் கழித்து அவரின் குழந்தையை மனைவி பெற்றெடுத்துள்ளார்.

கன்சாஸை சேர்ந்தவர் ஜெசி (31). இவர் மனைவி லிசா மேரி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் நான்காவது முறையாக லிசா கர்ப்பமானார்.

அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் ஜெசி சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இது கர்ப்பிணி லிசாவை அதிர்ச்சியடைய செய்த நிலையில் கணவர் சடலத்தை பார்த்து கதறி அழுதார். கணவர் நினைவாகவே இருந்த லிசாவுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு ஜெசி இலியட் மில்லர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து லிசா கூறுகையில், என் கணவர் உயிரிழந்த அந்த நொடியை என்னால் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் நான் கர்ப்பமாக இருந்த போது எந்தவொரு சிக்கலும் ஏற்படவில்லை, ஆனால் இந்த முறை கடுமையான சிக்கலை சந்தித்தேன்.

என பிரசவம் நெருங்கிய சமயத்தில் அந்த அறை முழுவதும் என் கணவரின் புகைப்படங்களை வைத்து கொண்டேன்.

இது எனக்கு ஆறுதலளித்தது, பிரசவத்தின் போது அவர் என்னுடன் இருந்தார் என்பது எனக்குத் தெரியும். என் குழந்தை பெரிதாகி அதனிடம் அவன் தந்தை ஜெசியின் பெருமை குறித்து நான் கூறவேண்டும்.

என்னுடைய கடினமான நேரத்தில் உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்