கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பல மாதங்களாக மறுத்த வந்த டிரம்ப் முதன் முறையாக பணிந்தார்! வெளியான புகைப்படம்

Report Print Basu in அமெரிக்கா

கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பொதுவெளியில் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்து வந்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளார்.

மேரிலாந்தின் பெதஸ்தாவில் உள்ள இராணுவ மருத்துவ மையத்தில் சனிக்கிழமையன்று காயமடைந்த வீரர்களை சந்திக்க சென்ற போது டிரம்ப் முகக்கவசம் அணிந்து சென்றார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்கா முழுவதும் வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து ட்ரம்ப் முதன் முறையாக பொதுவெளியில் முகக்கவத்துடன் காணப்பட்டார்.

ட்ரம்ப் முன்னர் பொதுவில் முகமூடி அணிய மறுத்துவிட்டார் அல்லது மற்ற அமெரிக்கர்களை அவ்வாறு செய்யும்படி கேட்டுக் கொண்டார், இது ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று கூறி, அவர் கூட்டத்தில் இருந்தால் தான் முகக்கவசம் அணிவேன் என்றும் மற்றவர்களிடமிருந்து சமூக இடைவெளியை கடைபிக்க முடியாது என்றும் கூறினார்.

CNN

முகக்கவத்துடன் மருத்துவமனைக்கு வந்த டிரம்ப் ஊடகத்தினரிடம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போது நிச்சயமாக முகமூடி அணிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அது எனக்கு ஒன்றும் கடினமாக இருக்காது என்று டிரம்ப் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறினார்.

வைரஸின் பரவலை குறைக்க முகமூடிகளைப் பயன்படுத்துமாறு உயர் பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ட்ரம்ப் முகக்கவம் அணிய மறுத்தது தலைமைத்துவத்தின் குறைபாட்டைக் காட்டியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்