கருப்பினத்தவர் ஆதரவு பேரணியில் கைது செய்யப்பட்ட பெண்: பொலிஸ் வாகனத்தை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்: அடுத்து நடந்தது...

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்சில் கருப்பினத்தவர் ஆதரவு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது இளம்பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால், உடனே போராட்டக்காரர்கள் பொலிஸ் வாகனத்தை சூழ்ந்துகொண்டு, அங்கிருந்து நகர அனுமதியளிக்க மறுத்துள்ளனர்.

வேறு வழியின்றி பொலிசார் அந்த பெண்ணை விடுவிக்கவேண்டியதாயிருந்திருக்கிறது.

ட்விட்டரில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண்ணை பொலிசார் தங்கள் வாகனத்திலிருந்து இறக்கி, அவரது கையிலிருந்த விலங்கை அகற்றுவதைக் காணலாம்.

அவர் இறங்கியதும் மற்றொரு பெண் அவரை கட்டியணைத்துக்கொள்ள, மக்கள் உற்சாக ஆரவாரம் செய்வதைக் காணமுடிகிறது.

அந்த இளம்பெண் யார், அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்