நடுவிரலை உயர்த்தி காட்டி ஜார்ஜ் பிளாட்டின் மரணத்தை கேலி செய்த இருவர்!.. வீடியோ காட்சிகள் வெளியானது

Report Print Fathima Fathima in அமெரிக்கா

ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தை கிண்டலடிக்கும் விதமாக இருவர் நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 25ம் திகதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர், பொலிஸ் காவலில் இருந்த போது கொல்லப்பட்டர்.

இவரது மரணத்துக்கு காரணமான பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இனவெறிக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நியூஜெர்சியில் நடந்த போராட்டத்தின் போது, ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டத்தை கிண்டலடிக்கும் விதமாக இருவர் நடித்து காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் யார் என அடையாளம் தெரியாத நிலையில், வீடியோவை பதிவேற்றிய டுவிட்டர், அறுவெறுக்கத்தக்க, இனவெறி பிடித்த மனிதர்களை பற்றி பேசுவதற்காகவே இந்த பதிவு, டிரம்ப் ஆதரவாளர்கள் இவ்வாறு செய்துள்ளனர், ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்