பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆணையம்: இந்திய வம்சாவளி நிபுணர்களுக்கு கவுரவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
55Shares

நியூயார்க்கில் சீர்குலைந்து இருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இந்திய வம்சாவளி நிபுணர்கள் அடங்கிய ஆணையத்தை மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குமோ அமைத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 515 ஆக உள்ளது.

இதில் 23 ஆயிரத்து 282 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஏப்ரலில் தினமும் 1,000 பேர் உயிரிழந்து வந்த நிலையில் தற்போது அதன் அளவு 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதற்கிடையே வைரஸ் பரவலை தடுக்க மாகாண நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதைத் தவிர, சீர்குலைந்துள்ள மாகாண பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் நியூயார்க் கவர்னர் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான எரிக் ஷ்மிட் தலைமையிலான ஒரு ஆணையத்தை அமைத்து ஆண்ட்ரூ குமோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

15 உறுப்பினர்கள் அடங்கிய இந்த ஆணையத்தில் இந்திய வம்சாவளிகளான சித் முகர்ஜி மற்றும் சதீஷ் திரிபாதி ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் நிபுணரான சித் முகர்ஜி, கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் 2011ல் புற்றுநோய் குறித்து வெளியிட்ட புத்தகத்திற்காக புலிட்சர் பரிசை வென்றுள்ளார்.

இதேபோல் நியூயார்க்கில் உள்ள பப்பல்லோ பல்கலைக்கழக தலைவராக பதவி வகித்து வரும் சதீஷ் திரிபாதி தேசிய உயர்கல்வி சமூகத்தின் தலைவராக உள்ளார்.

இந்த ஆணையம் நியூயார்க் மாகாண பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்