தந்தையை 750 மைல் தூரம் சைக்கிளில் அழைத்து வந்த இந்திய சிறுமி... பாராட்டிய இவான்கா ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
501Shares

இந்திய சிறுமி ஒருவர் தனது தந்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 750 மைல் தூரம் பயணித்துள்ளதை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் பாராட்டியுள்ளதற்கு விமர்சனம் எழுந்துள்ளது.

Jyoti Kumari (15), தனது தந்தையான Mohan Paswanஐ சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஒரு வார காலம், சுமார் 750 மைல்கள் பயணித்து வட இந்தியாவிலிருக்கும் புது டெல்லிக்கு அருகிலுள்ள Gurugram என்ற இடத்திலிருந்து தங்கள் வீடு இருக்கும் கிழக்கு இந்தியாவிலுள்ள பீகாரிலிருக்கும் Darbhanga மாவட்டம் வரை வந்துள்ளார்.

ஊரடங்கால் வேலையிழந்து பாதிப்புக்குள்ளானவர்களில் Mohan Paswanம் ஒருவர். புது டில்லிக்கு வேலைக்கு போன இடத்தில் வேலையில்லாததால் எப்படியாவது வீட்டுக்கு திரும்பிவிட முடிவு செய்துள்ளனர் தந்தையும் மகளும்.

ஆனால், விபத்து ஒன்றினால் பாதிக்கப்பட்ட Mohan Paswanஆல் சைக்கிள் ஓட்ட முடியாது.

15 வயது சிறுமி எப்படி தன்னையும் ஏற்றிக்கொண்டு சைக்கிளில் அவ்வளவு தூரம் பயணிப்பாள் என Paswan சந்தேகப்பட, ‘சைக்கிளில் ஏறி உட்காருங்கள், மற்றவர்கள் என்ன சொல்லுவார்கள் என்றெல்லாம் யோசிக்காதீர்கள்’ என்றாளாம் Jyoti.

வரும் வழியில் பிஸ்கட்களையும், வழியில் மக்கள் கொடுத்த உணவையும் உண்டுவிட்டு கொளுத்தும் வெயிலில் பயணித்திருக்கிறார்கள் இருவரும்.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அமெரிக்க திபர் ட்ரம்பின் மகளான இவான்கா, ட்வீட் ஒன்றில் Jyotiயை மனதார பாராட்டியிருந்தார்.

அவர் வெளியிட்ட ட்வீட்டில், 15 வயது Jyoti Kumari, காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 1,200 மைல்கள் பயணித்து 7 நாட்களில் தங்கள் சொந்த கிராமத்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார்.

எதையும் தாங்கும் அன்பினால் விளைந்த இந்த அழகான செயற்கரிய செயல் மக்களின் மனதுடன் சைக்கிள் ஓட்டுவோர் கூட்டமைப்பின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்திய சைக்கிள் ஓட்டுவோர் கூட்டமைப்பு, Jyotiயை ஒரு சைக்கிள் பந்தய வீராங்கனையாக பயிற்றுவிக்க உள்ளதாம்.

இதற்கிடையில் இவான்காவின் பாராட்டுக்கு விமர்சனமும் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியினர், ஊரடங்கால் போக்குவரத்து முடங்கிப்போனதால், வேறு வழியின்றி சைக்கிளில் கஷ்டப்பட்டு தன் தந்தையையும் ஏற்றிக்கொண்டு சிறுமி ஒருவர் பயணித்த செயல் கொண்டாடுவதற்குரிய ஒன்றல்ல என விமர்சித்துள்ளனர்.

Jyotiயோ இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல், தான் சர்ச்சைக்குள் வர விரும்பவில்லை என்றும், எல்லா இடங்களிலிருந்து தனக்கு கிடைக்கும் பாராட்டு தன்னை மகிழச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்