தனக்கு கொரோனா என்று பொய் சொல்லிய நபர் கைது... 100,000 டொலர்கள் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
79Shares

அமெரிக்கர் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக தனது அலுவலக உரிமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

ஜார்ஜியாவைச் சேர்ந்த Santwon Antonio Davis (34), தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தான் பணி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எனவே, அலுவலகம் கிருமிநீக்கம் செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. Davisஉடன் நெருக்கமாக பணியாற்றிய நான்கு பேர் தனிமைப்படுத்தப்படவேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 100,000 டொலர்களுக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர், உண்மையில் Davisக்கு கொரோனா இல்லை என்று தெரியவரவே, நிறுவன பணியாளருக்கு 100,000 டொலர்களுக்கும் அதிகமாக இழப்பு ஏற்படுத்தியதற்காகவும், நான்கு பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்